| மீனத் தடங்க ணவண் மிச்சில் | | மிசைந்திட் டதுவு நசைமிக்கு | | விரைத்தீங் குமுதத் தமுதடிகள் | | விருந்தா டியதும் விண்டோமோ | | கூனற் பிறையின் கோடுரிஞ்சும் | | கொடிமா டத்து வெயில்விரிக்கும் | | குருமா மணியாற் சுரநதியிற் | | கொழுந்தா மரைகண் முறுக்குடைந்து | | தேனக் கலருஞ் சோணாடா | | சிறியேஞ் சிற்றில் சிதையேலே | | செந்நெற் பழனப் புள்ளூரா | | சிறியேஞ் சிற்றில் சிதையேலே. |
426. | பிள்ளை மதிச்செஞ் சடைச்செருகும் | | பெருமா னார்க்கு முலகேழும் | | பெற்ற தாய்க்கு நீயருமைப் | | பிள்ளை யெனினெம் பேராய | | வெள்ள மமைத்த சிறுசோறு | | வேண்டி னிடுகே மலதெளியேம் | | விளையா டிடத்துச் சிறுகுறும்பு | | விளைத்தாற் பொறுக்க விதியுண்டோ | | கள்ளவிழிச்சூ ரரமகளிர் | | காமன் கொடியேற் றெனவியப்பக் | | கற்ப தருவிற் படர்ந்தேறு | | காமர் கொடிச்செங் கயல்பாயும் |
(2) நசை - விருப்பம். குமுதத்து அமுது - வாய் நீர்.
(3) கோடு - முனை. சுரநதி - ஆகாய கங்கை. மணியின் ஒளியை வெயிலென்று கருதித் தாமரை மலர்ந்தது.
426. (அடி, 1) பிள்ளைமதி - பிறையை. தாய்; உமாதேவியார்.
(1-2) ஆய வெள்ளம் - விளையாட்டு மகளிர் கூட்டம். விதி - நியாயம்.
(3) காமன் கொடியேற்று - மன்மதன் திருவிழாவிற்குரிய துவசாரோகணம். காமர்கொடி - காமவல்லியில். கற்பக மரத்திற் படர்ந்தோறிய காமவல்லியின்கண் கயல்மீன் பாயுங்காலத்தில் காமனுக்குரிய துவசத்தம்பத்தில் மீனக்கொடியை யேற்றியது போலத் தோற்றியது.
|