| தெள்ளு புனற்கா விரிநாடா | | சிறியேஞ் சிற்றில் சிதையேலே | | செந்நெற் பழனப் புள்ளூரா | | சிறியேஞ் சிற்றில் சிதையேலே. |
427. | மடல்வா யவிழ்ந்த குழற்பேதை | | ஒருத்தி திருத்தும் பகிரண்ட | | மணற்சிற் றிலையோர் கணத்தின்கண் | | மட்டித் தாடு மைந்தனருள் | | விடலாய் தமியேஞ் சிற்றின்முற்றும் | | விளைாயாட் டாக வொருநீயும் | | வீட்டா நிற்பத் தொடங்கினையால் | | வித்து முளையும் வேறன்றே | | கடமா மருப்புஞ் சுடர்மணியும் | | கதிர்நித் திலமு மகளிர்முலைக் | | களபத் தொடுகுங் குமச்சேறும் | | கரைத்து விடுத்தக் கடற்குட்டம் | | திடராச் செயுங்கா விரிநாடா | | சிறியேஞ் சிற்றில் சிதையேலே | | செந்நெற் பழனப் புள்ளூரா | | சிறியேஞ் சிற்றில் சிதையேலே. |
427. (அடி, 1) பேதை யென்றது பெண்ணென்னும் செம்பொருளுடையதேனும் பகிரண்ட மணற்சிற்றிலென்ற உருவகத்திற்கியையப் பருவத்தையும் குறித்து நின்றது. பேதை - உமாதேவியார். பகிரண்டம் - வெளியேயுள்ள அண்டகோளம். மட்டித்து - தேய்த்து (34). மைந்தன் - வன்மையையுடைய சிவபெருமான்; இளைஞனென்பது வேறுபொருள்.
(2) வீட்டா நிற்ப - அழிக்க. வித்தும் முளையும் வேறன்றே: “செந்நெல்லா லாய செழுமுளை மற்றுமச், செந்நெல்லே யாகி விளைதலால் - அந்நெல், வயனிறையக் காய்க்கும் வளவய லூர, மகனறிவு தந்தையறிவு” (நாலடி. 367.)
(3) கடமா - யானை. கடற்குட்டம் - பள்ளமான கடல்; “கடற்குட்டம் போழ்வர் கலவர்” (நான்மணிக். 18.)
(4) திடர் - மேடு.
|