428. | வாமாண் கலைப்பே ரகலல்குல் | | மடமா னோக்கி னரமகளிர் | | மகிழ்பூத் திருப்பப் புத்தேட்கு | | வந்த விடுக்கண் மாற்றினையால் | | கோமா னினக்கப் பெருந்தேவர் | | குலமே யன்றி யடியேமும் | | குற்றே வலுக்கா மகம்படிமைக் | | குடியாக் கொண்டாற் குறையுண்டோ | | காய்மாண் குலைச்செவ விளநீரைக் | | கடவுட் சாதி மடநல்லார் | | கதிர்ப்பூண் முலையென் றேக்கறப்பைங் | | கமுகு நகைவாண் முத்தரும்பும் | | தேமாம் பொழிற்றீம் புனனாடா | | சிறியேஞ் சிற்றில் சிதையேலே | | செந்நெற் பழனப் புள்ளூரா | | சிறியேஞ் சிற்றில் சிதையேலே. |
429. | கருவீற் றிருந்த பெருங்கருணை | | கடைக்கண் பொழிய வீற்றிருக்கும் | | கடவு ணீயே பகிரண்டம் | | கண்டா யெனின்வண் டடைகிடப்ப | | மருவீற் றிருந்த குழன்மகளிர் | | வண்டற் றுறைக்கு மணற்சிற்றில் |
428. (அடி, 1) புத்தேட்கு - தேவர்களுக்கு; சாதியொருமை; இந்திரனுக்கு எனலும் ஆம்.
(2) அகம்படிமைக்குடி - அணுக்கத் தொண்டுபுரியும் அடியர்; அகம்படிமைத் தொண்டுக்குப் பெண்பாலாரும் உரியர்.
(3) காய் மாண் குலைச் செவ்விளநீர்: காய்மாண்ட தெங்கின் பழம்” (சீவக.) கடவுட்சாதி - தேவசாதியினர்; எழுவாய். ஏக்கற - ஏமாந்து நிற்ப. அது கண்டு கமுகு நகைப்பதுபோல முத்தரும்பியது. கமுகில் முத்துப் பிறப்பதாகக் கூறுதல் மரபு. இளநீரை நகிலென்று கருதுதல்; (334.)
(4) தேமா - ஒருவகை மாமரம்.
429. (அடி, 1) கரு - முதிர்வு. கருணையைக் கடைக்கண் பொழிய (24-8.) கண்டாய் - சிருட்டித்தாய்.
(2) மரு - நறுமணம். வண்டல்துறை - விளையாட்டிடம். வகுக்குர் தொழிற்கு - சிருட்டிக்கும் தொழிற்கு. மாறு - விரோதம்.
|