| மனைகோ லுவது மற்றடிகேள் | | வகுக்குந் தொழிற்கு மாறன்றே | | குருவீற் றிருந்த மணிமாடக் | | கொடிமா நகரந் தொறுமலர்ந்த | | கொழுந்தா மரைப்பூங் கோயிலிற்பல் | | கோடி யுருவங் கொண்டுசெழுந் | | திருவீற் றிருந்த சோணாடா | | சிறியேஞ் சிற்றில் சிதையேலே | | செந்நெற் பழனப் புள்ளூரா | | சிறியேஞ் சிற்றில் சிதையேலே. |
9. சிறுபறைப் பருவம்
430. | ஊற்றும் பசுந்தே னுவட்டநெட் டிதழ்விரியும் | | ஒண்காந்தண் முச்சியுச்சி | | ஒருவனீ மும்முதற் கடவுளு மிளைப்பாற | | உலகெலாந் தலையளித்துப் | | போற்றுந் திறத்தினப் பழமறைக் கிழவன் | | புரிந்தபகி ரண்டங்கடாம் | | புதுக்குவ கடுப்பநெடு வெளிமுகட் டுக்குவிரி | | புதுநிலாக் கற்றையிட்டுத் |
(1-2) நீ உன் தகுதிக்கேற்ப அண்டங்களை ஆக்குகின்றாய்; யாமும் எம் தகுதிக்கேற்பச் சிற்றிலை ஆக்குகின்றோம். இது நின் தொழிற்கு மாறான தன்றாதலின், நினக்கு இதன்பால் வெறுப்பு உண்டாவது நியாய மன்றென்றபடி.
(3) குரு - நிறம். கொடிமா நகரம்: “கொடிமா நகரும்” (தக்க. 206) தாமரையாகிய கோயிலில்.
(4) திரு வீற்றிருந்த - திருமகள் வருத்தமின்றியிருந்த.
430. (அடி, 1) உவட்ட - பெருக்கெடுப்ப. காந்தள் - முருகக் கடவுளுக்குரிய அடையாளப் பூ. தலையளித்து - பாதுகாத்து.
(2) போற்றும் திறத்தின் - போற்றும் வன்மையைப் போல. பழமறைக் கிழவன் - பிரமதேவர். அண்டங்களை. புதுக்குவ கடுப்ப - புதுக்குதலைப்போல. வெளி முகட்டுக்கு - வானமாகிய மேற்பரப்பிற்க.
|