பக்கம் எண் :

முத்துக்குமார சுவாமி பிள்ளைத்தமிழ்323

தூற்றும் பெயர்க்கரு முகிற்படாத் தையும்வெண்
    டுகிற்படா மாக்கிவீக்கித்
தொடுகடற் புவனப் பெருந்ததொ டண்டச்
    சுவர்த்தலத் துக்கும்வெள்ளை
தீற்றுஞ் சுதைத்தவள மாடமலி வேளூர
    சிறுபறை முழக்கியருளே
தென்கலைக் கும்பழைய வடகலைக் குந்தலைவ
    சிறுபறை முழக்கியருளே.    
(1)

431.
விளைக்கும் பெரும்புவன மொக்கக் கரைத்தகடை    
    வெள்ளஞ் சுருங்கவீங்கி    
வேதண்ட மெட்டினொடு மூதண்ட கூடத்தும்    
    விளையாடி யுலகமேழும்    
வளைக்குங் கருங்கடல் பெரும்புறக் கடலோடும்    
    வாய்மடுத் தெதிரெடுப்ப    
வருபுனற் காவேரி வளநாட நாடொறு    
    மதிக்கடவு ளேறியேறி    
இளைக்கும் புளிக்கறை முயற்கறை யறக்காலும்    
    இளநிலா வெள்ளமூழ்கி    
எறிதிரைப் பாகிரதிப்புனல் குடைந்திடும்    
    இடைக்கொடி நகிற்கொடியெனத்    

    (3) கருமுகிற் படாத்தையும் - மேகமாகிய கரிய மேற்கட்டியையும். வீக்கி - கட்டி.

    (3-4) வெள்ளை தீற்றும் - வெண்ணிறத்தைப் பூசும். சுதை - சுண்ணாம்பு.

    வேளூரிலுள்ள மாடங்களின் வெள்ளிய ஒளி எங்கும் பரவி உலக முழுவதையும் வெள்ளையடித்துப் புதுக்கியதுபோலச் செய்தது.

    431. (அடி, 1-2) காவிரி நதியின் வெள்ளப் பெருமை கூறப்படும். கடைவெள்ளம் - யுகாந்த காலத்து வெள்ளம். வேதண்டம் - மலை. மூதண்ட கூடம் - பழையதாகிய அண்ட கூடம்.

    (3-4) ஈண்டுக்க பளிங்கு அறையின் வெள்ளிய ஒளியாகிய வெள்ளத்தில் மூழ்கி நிற்கும் துகிற்கொடி ஆகாய கங்கையில் மூழ்கும் மகளிரைப் போன்றது.

    முயற்கறை அற - சந்திரன் முயலாகிய தன் களங்கம் மறையும்படி. பளிக்கறை காலும் நிலா வெள்ளம். இடைக் கொடி நகிற்கொடி - இடையாகிய