| திளைக்குந் துகிற்கொடி முகிற்கொடிசெய் வேளூர | | சிறுபறை முழக்கியருளே | | தென்கலைக்கும்பழைய வடகலைக் குந்தலைவ | | |
432. | இருளுந் தரங்கக் கருங்கடன் முகட்டெழும் | | இளம்பிறை முயற்குழந்தைக் | | கேறவிடு மோடமென வான்மீன் றடந்திரை | | எடுத்தெறியு நெடுமீனெனத் | | தரளம் பதிந்திட்ட மணிமுறுவ லவரோடு | | தருநிழற் செல்வருய்க்கும் | | தமணிய விமானமும் வெயிற்கதிர்ப் போர்வையான் | | தனியாழி திசையுருட்ட | | உருளுங் கொடித்தேரும் வீற்றுவீற் றெழில்புனைந் | | தோட்டுபொற் றெப்பமென்ன | | உலகேழு மலையெட்டு மொழுகுகதிர் விழுதுவிடும் | | ஒண்ணிலாப் புணரிகோப்பத் | | திரளும் பளிக்குமா டங்கள் பொலி வேளூர | | சிறுபறை முழக்கியருளே | | தென்கலைக் கும்பழைய வடகலைக் குந்தலைவ | | |
கொடியையும் நகிலையும் உடைய கொடிபோன்ற பெண். துகிற்கொடிக்கு நகிற்கொடி உவமை. துகிற்கொடி மேகமண்டலத்தை யளாவி அம்முகிலைக் கோத்து நின்று முகிற்கொடியாயிற்று. துகிற்கொடி எழுவாய்.
432. வேளூரிலுள்ள பளிக்கு மாடங்களின் ஒளி, மிக்க வெள்ளம் போலப் பரவி நிற்ப, அதன்கண் சந்திரன் முதலியன தோற்றுமாற்றை வருணிக்கின்றார்.
(அடி, 1) பிறை ஓடமாகத் தோற்றியது. வான்மீன் - நட்சத்திரங்கள். அவை மீன்களைப் போன்றன.
(2) தருநிழற் செல்வர் - கற்பக நிழலில் வாழும் தேவர். உய்க்கும் - செலுத்தும். தமனிய விமானம் -பொன் விமானங்கள். வெயிற்கதிர்ப் போர்வையான் - சூரியன். தனியாழி - ஒற்றைச் சக்கரம்.
(3) வீறு வீறு - தனித்தனியே. நிலாப்புணரி - நிலாவெள்ளம்; என்றது வெள்ளொளியின் மிகுதியை. (2-3) தேவர்கள் செலுத்தும் விமானங்களும் சூரியனது தேரும் பொற்றெப்பங்களாகத் தோற்றின.
|