பக்கம் எண் :

முத்துக்குமார சுவாமி பிள்ளைத்தமிழ்325

433.
மொய்ம்பிற் பெரும்புவன மொக்கச் சுமக்கின்ற
    மோடாமை முதுகுளுக்க
முடவுப் படங்கிழிந் தரவரசி னாயிர
    முடித்தலையு மூளைபொங்கக்
கம்பக் கடாயானை யெட்டும் பிடர்த்தலை
    கழுத்தொடு முரிந்துகவிழக்
கதிர்மணிச் சூட்டுநெட் டரவெட்டும் வடவைக்
    கடுங்கன்ற் கண்பிதுங்க
அம்பொற் றடம்புரிசை யெழுபெருந் தட்டுருவி
    அண்டகூ டத்தளவலால்
அவரவர் வழங்குதற் கிடுதலைக் கடையென
    அடுக்கேழு நிலையேழுமாம்
செம்பொற் றிருக்கோ புரங்கள்பொலி வேளூர
    சிறுபறை முழக்கியருளே
தென்கலைக் கும்பழைய வடகலைக் குந்தலைவ
    சிறுபறை முழக்கியருளே.    
(4)

434.
தரிக்குஞ் சுடர்ப்பருதி முழுமதிக் கடவுளொடு
    தடமதில் கடந்தநகர்

    433. இச்செய்யுளில் கோபுரத்தின் பெருமையும் உயர்ச்சியும் கூறப்படும்.

    (அடி, 1) மொய்ம்பின் - வன்மையினால். மோட்டாமை - பெரிய ஆமை; ஆதி கூர்மம்; ஆதிசேடனுக்குக் கீழே இருந்து உலகைச் சுமப்பது. உளுக்க - பாரந்தாங்காமல் அசைப்ப. முடவுப்படம் - வளைந்த படம். அரவரசு - ஆதிசேடன்.

    (2) கடாயானை - மதயானைகள். யானை எட்டும் பூமியைச் சுமப்பன. முரிந்து - வளைந்து. அரவெடு - அட்டமா நாகங்கள்; இவையும் பூமியைச் சுமப்பன. இவை கண்ணால் விடங்கக்கும் திட்டிவிடச் சாதிப்பாம்புகளாதலின், ‘வடவைக் கடுங்கன்ற்கண்’ என்றார்.

    (3) புரிசை - மதில். எழுபெருந் தட்டு - ஏழுலகமாகிய தட்டுக்கள். மதில் ஏழுலகத்தையும் கடந்து மேலே சென்றமையின் நகருக்குள் புகுவதற்கு வழி இலதாயிற்று.

    (3-4) தலைக்கடை - வாயில்; ஏழுலகத்தாரும் சென்று வருதற்கு ஏழு நிலைகள் அமைந்த கோபுரம்.

    434. சூரியனும் சந்திரனும் நகருக்குள் புக இயலாதவாறு மதில்கள் உயர்ந்துள்ளனவாதலினாலும், மாணிக்கம் இழைத்த மாடங்களும் முத்திழைத்த மாடங்களும் வெயிலையும் நிலவையும் ஒருங்கே வீசுவதாலும்