பக்கம் எண் :

326குமரகுருபரசுவாமிகள் பிரபந்தத் திரட்டு

சாரவரி தாற்புவன கோடிகட் கொளிசெயக்
  சதுமுகன் கற்பந்தொறும்
விரிக்கின்ற விருசுடரு மொருவழித் தொக்கென   
    வியன்கதிர்ப் படலமூடி
வீங்கிருள் விழுங்குசெம் மணிமாட நிரையுமொளி
    விளைபசுங் கதிர்வெண்புரி
புரிக்குச் செழுந்தரள மாடமும் வெயிலினொடு   
    பொழிநிலாப் போர்ப்பமுற்றும்
போதுதெரி யாமையிற் குமுதமொடு சதவிதழ்ப்
    போதுமே யிருபோதையும்
தெரிக்குந் தடம்பணை யுடுத்ததமிழ் வேளூர   
    சிறுபற் முழக்கியருளே
தென்கலைக் கும்பழைய வடகலைக் குந்தலைவ
    சிறுபறை முழக்கியருளே.    
(5)

வேறு
435.
மழைமுகில் பிளிறு முழக்கென விரிசிறை
        மடமயி லினமகவ
மால்கட லோலிடு மொலியென விரக
        மடந்தையர் மனநெகிழப்

இரவும் பகலும் தெரியாமல் அவ்வூரினர் மயங்குவர்; ஆயினும் பகலில் மலரும் தாமரையும் இரவில் மலரும் குமுதமும் தாம் மலர்தலால் பொழுதைப் புலப்படுத்தின.

    (அடி, 1) பருதி - சூரியன். அரிதால் - அரிது ஆதலால்.

    (2) இருசுடரும் - சந்திரனும் சூரியனும். செம்மணி மாடம் நிரை - மாணிக்கங்கள் இழைத்த மாடங்களின் வரிசை. கதிர் வெண்புரி - வெண்கிரணங்களாகிய புரியை; புரி - கயிறு.

    (3) தரளமாடம் - முத்துக்களால் ஆகிய மாடம். சதவிதழ்ப் போது - தாமரை. இருபோதையும் - இரவும் பகலுமாகிய இரண்டு பொழுதுகளையும்.

    (3-4) குமுதம் தான் மலர்வதனால் இராக்காலத்தையும், தாமரை தான் மலர்வதனால் பகற்காலத்தையும் புலப்படுத்தின. தடம்பணை - பரந்த வயல்கள்.

    435. முருகக் கடவுள் சிறுபறை முழக்க அதன் ஒலியினால் நிகழும் நிகழ்ச்சிகள் கூறப்படும்.

    (அடி, 1) பிளிறும் - முழங்கும். சிறுபறை யொலியை மேக முழக்கமென எண்ணி மயில்கள் மகிழ்ந்து அகவின. விரக மடந்தையர் - தலைவரைப் பிரிந்த பிரிவுத் துன்பத்தையுடைய மகளிர்; விரகம் - பிரிவு.