| பழமறை யார்ப்பென வாகுதி வேட்டெழு | | பண்ணவ ருண்மகிழப் | | பரநா தத்தொலி யெனவனு பூதி | | பலித்தவர் நெக்குருக | | அழலவிர் சோதியெ மைய னடஞ்செய | | ஆயிர மங்கையினோர் | | அண்ண றுவைத்திடு குடமுழ வொடுசுடர் | | ஆழி யவன்கொட்டு | | முழவென வமரரு முனிவரு மார்ப்ப | | முழக்குக சிறுபறையே | | முத்தமிழ் பயில்பரு திப்பதி முருகன் | | |
436. | பெருவெளி முகடு திறந்திட் டண்டப் | | பித்திகை வெடியாமே | | பேரண் டத்துள வேதண் டங்கள் | | பிதிர்ந்துத்தி ராகாமே | | குருமணி சிதறிய வென்ன வுடுத்திரள் | | கொட்டுண் டுதிராமே | | குவடு படுந்திசை செவிடு படச்சிலர் | | குடர்கள் குழம்பாமே | | திருவிர கொடுநக கண்களி னுஞ்செங் | | குருதி ததும்பாமே |
(2) ஆகுதி - யாகத்தில் தேவருக்கு அளிக்கப்படும் உணவு. வேட்டு - விரும்பி. பண்ணவர் - தேவர். அனுபூதி பலித்தவர் - ஞான அனுபவம் முற்றினவர்கள்.
(3) என் ஐயன் - சிவபெருமான். ஆயிரம் அங்கையின் ஓர் அண்ணல் - வாணாசுரன். துவைத்திடு - முழக்கும். சுடராழியவன் - திருமால்.
436. இன்னபடி சிறுபறை முழக்கவேண்டுமென்று வேண்டுகின்றார். (அடி, 1) அண்டப்பித்திகை - அண்டச்சுவர். வெடியாமே - பேரொலியால் பிளவுபடாமல். பிதிர்ந்து - தூளாகி.
(2) குருமணி சிதறிய என்ன - நிறமுள்ள மாணிக்கங்கள் சிதறிப் போயினவென்று சொல்லும்படி. கொட்டுண்டு - கொட்டிப் போய். சிலர் - மலையில் வாழ்வோர்.
(3) விரலால் அடிக்கும்போது அடி வலிதாயின் நகக்கண்ணில் இரத்தம் குழம்புதல் இயல்பு.
|