| சேயொளி நின்று துளும்பிட நின்சிறு | | செங்கை வருந்தாமே | | முருகலர் தாரவ னொருமுறை மெல்ல | | முழக்குக சிறுபறையே | | முத்தமிழ் பயில்வரு திப்பதி முருகன் | | |
437. | வம்மி னெனப்புல வோரை யழைத்திடு | | வண்கொடை முரசமென | | வடகலை தென்கலை யொடுபயி லுங்கவி | | வாணர்க ளோடிவர | | அம்மென் மடப்பிடி பொன்னுல கீன்றவ | | ணங்கை மணம்புணரும் | | அணிகிளர் மணமுர சென்னவெ மையனொ | | டம்மை மனங்குளிரத் | | தெம்முனை சாயச் சமர்விளை யாடிச் | | செங்கள வேள்விசெயும் | | திறன்முர செனவிமை யவர்விழ வயரச் | | செழுநகர் வீதிதொறு | | மும்முர சமுமதிர் காவிரி நாடன் | | முழக்குக சிறுபறையே | | முத்தமிழ் பயில்பரு திப்பதி முருகன் | | |
(4) முருகு - நறுமணம்.
437. வேளூரில், தியாகமுரசு, மணமுரசு, வெற்றிமுரசென்னும் மும்முரசும் அதிர்தலைக் கூறுகின்றார்.
(அடி, 1) கொடைமுரசம் - தியாகமுரசம். என : எண்ணிடைச் சொல்.(2) பொன்னுலகின்ற அணங்கு - தெய்வயானை. (பி-ம்.) ‘அணிகிளர் மணிமுர சென்ன’. என் ஐயன் -சிவபெருமான். அம்மை - உமாதேவியார்.
(3) தெவ் முனை சாய - பகைவர் போர்க்களத்தில் தோல்வியுற. செங்கள வேள்வி செயும் - இரத்தத்தாற் சிவந்த களத்தில் பகைவரை வென்று அவ்வெற்றியைக் கொண்டாடிக் களவேள்வி செய்யும்.
(முடிபு.) கொடைமுரசம் முதலியனவெனச் மும்மரசமும் அதிர் காவிரி நாடன் என்க; முதலியனவெனச் சிறுபறை முழக்குக வென்பதும் பொருந்தும்.
|