பக்கம் எண் :

330குமரகுருபரசுவாமிகள் பிரபந்தத் திரட்டு

10.சிறுதேர்ப் பருவம்

440.
போரோடு படைதுறந் துடறிறந் தோடுசெம்
    புனலோட வோடிநிமிரும்
புணரிப் பெருந்தானை யவுணப் படைத்தலைவர்
    பூதபு படைத்தலைவர்முன்
தாரோ டவிழ்ந்திட்ட குஞ்சிக் கிமைத்திட்ட
    தழல்விழிக் கெதிர்செலாத
தாளுக்கு வாள்சோர் தடக்கைக்கு நாமநும்
    தாலிக்கு வேலிகொலெனாப்
பீரோடு கொங்கைக்க ணீரோடு வெள்ளருவி
    பெருகக் கடைக்கணிற்கும்
பெய்வளை யவர்க்கோத வவர்விழிக டொறுமிளம்
    பேதையர்கள் கண்டொறுமெனத்

    440. போரில் தலைமயிர் அவிழ்ந்தாரையும், கண் இமைத்தாரையும் பின்னே அடியிட்டாரையும், வாள் சோர்ந்தாரையும் கொல்லுதல் அறமன்றாதலின் (தொல். புறத். சூ. 10. ந.) அத்தகைய அவுணர்களை முருகக் கடவுள் பிழைத்துப் போகவிட்டமை இதிற் கூறப்படும்.

    (அடி, 1) போரையும் படைக்கலத்தையும் துறந்து, செம்புனல் - இரத்தம். தானை - அசுரசேனையிலுள்ளார்; எழுவாய். அவுணப் படைத்தலைவர் - தேவர்களுக்கு எதிராக வந்து பொருத அசுரசேனைத் தலைவர்களுடைய.

    (2) குஞ்சி முதலியன அவுணப்படைத்தலைவர்களுக்கு உரியன. எதிர் செலாத தாளுக்கு - பின்வாங்கிய காலுக்கு. நாமம் நும் தாலிக்கு - அச்சத்திற்கு இடமாகிய நும்முடைய தாலிக்கு. வேலி - பாதுகாப்பு; முருகக் கடவுள் வேலி. கொல்: அசைநிலை.

    குஞ்சி முதலியன அவற்றை யுடையாரைக் குறித்து நின்றன. தம் கணவருடைய உயிர்க்கு இறுதி நேருமோவென்று அஞ்சிய மகளிராதலின் அவர்கள் தாலி அச்சத்திற் கிடமாயிற்று.

    (3) நீர் - பசலை. கொங்கைக்கண் - நகிலினிடத்தே. கடைக்கண் நிற்கும் - தம் கணவர் வரவை எதிர்நோக்கி வாயிற்கண் நிற்கும். பெய்வளையவர்க்கு - அவுணப் படைத்தலைவர்களுடைத மனைவியருக்கு.

    விளையாட்டுப் பேதைமகளிர் கண்ணைவிட்டகலாத இளமையொடு நின்றது போல அவுணர் மனைவியர் கண்ணைவிட்டகலாதவன்; என்றது, தம் கணவரைப் பாதுகாத்த அருள்பற்றி அவன் திருவுருவை எண்ணியிருப்பரென்றவாறு.