பக்கம் எண் :

முத்துக்குமார சுவாமி பிள்ளைத்தமிழ்331

தேரோடு மொருபெருஞ் சிலையோடு நின்றவன்
    சிறுதே ருருட்டியருளே
திருவளர வளர்கந்த புரிவள ரிளங்குமர
    சிறுதே ருருட்டியருளே.    
(1)

441.
கம்பக் களிற்றுக் கடற்றானை வீரர்கட்    
    கடையிற் கடைக்கனலெழக்    
கண்டொட் டுணுஞ்சில மருட்பேய் கரிந்தெழு    
    கடுங்குருதி வெள்ளமூழ்கித்    
தும்பைத் தலைச்செம் மயிர்ச்சிகை யினைச்சுடு    
    கனற்சிகை யெனப்பதைப்பச்    
சூட்டிறைச் சிக்குச் சிணுங்குங் குறட்பேய்க்கொர்    
    சூர்ப்பேய் கொழுந்தசைகள்கோத்    
தம்பிற் சுடத்தான் கவந்தமொடு தொந்தமிட்    
    டாடும் பறந்தலைநிலத்    
தானைப் பிணக்குன்று மவுணப் பிணக்காடும்    
    அளறுபட் டொழியநின்றோர்    

    (4) சிலையோடு நின்றவன்: 349.

    (1-4) துறந்து ஓடித் தானை எனா ஓத, அவர் விழிகடொறும் நின்றவன்.

    441. போர்க்களத்தில் தசை முதலியவற்றை உண்ண வந்த பேய்களின் செயல்கள் காணப்படும். வீரரது கண்ணைத் தோண்டியுண்ணும் பேய் ஒன்று அவ்வீரரது செம்மயிரை நெருப்பென்று அஞ்ச, அதன்கண் மற்றொரு பேய் தசையைச் சுடமுயலுதல் இச்செய்யுளின் முற்பகுதியில் கூறப்படும்.

    (அடி, 1) வீரர் - அசுர வீரர். கடைக்கனல் - யுகாந்த காலத்து அக்கினி. கண்தொட்டுண்ணும் பேய்; “கண்டொட்டுண்ட கழிமுடைக் கருத்தலை” (முருகு.) தொட்டு - தோண்டி. மருட்பேய் - மயக்கத்தையுடைய பேய்; பேய் மூழ்கி.

    (2) அசுரர்களாதலின் செம்மயிர் கூறப்பட்டது. கனற்சிகை - நெருப்புக் கொழுந்து. என - என்று எண்ணி. சூட்டிறைச்சி - சுட்ட தசை. சிணுங்கும் - முணுமுணுத்து அழும். குறட்பேய்க்கு - குட்டையாகிய இளைய பேய்க்கு. சூர்ப்பேய் - அச்சத்தைத் தரும் பெரிய பேய்.

    (2-3) தான் - குறட்பேய். கவந்தம் - தலையற்ற உடலம். தொந்தமிட்டு ஆடுதல் - உடன் இணைந்து ஆடுதல். பறந்தலை - போர்க்களம். சூட்டிறைச்சி வேண்டுமென்ற இளம்பேய்க்கு அதனைத் தரம்பொருட்டுப் பெரிய