பக்கம் எண் :

332குமரகுருபரசுவாமிகள் பிரபந்தத் திரட்டு

செம்பொற் றடந்தே ருருட்டிவரு சேவகன்
    சிறுதே ருருட்டியருளே
திருவளர வளர்கந்த புரிவள ரிளங்குமர
    சிறுதே ருருட்டியருளே.    
(2)

442.
வண்டேறு செந்நிறப் பங்கித் தலைக்கமல
    வனமூடு குருதியாற்று
மால்யானை கையெடுத் தார்த்திநீந் தப்பணரி
    மகரமீ னெனநினைந்து
கொண்டேகு சிறுகுடர்ப் பெருவலை யெடுத்தெறி
    குறட்பேய் நெடுஞ்சினமுறக்
குறுநரி பிடித்தீர்ப்ப வலறுவதும் வீரர்தொடு
    கொலைநேமி யவுணருயிரை
உண்டேகு வதுமொருவன் விடவோ லிடுங்கரிக்
    சூதவவரு திகிரியேய்க்கும்
ஒல்லென் பறந்தலை மறந்தலைக் கொண்டசூர்
    உய்த்திட்ட விந்த்ரஞாலத்
திண்டேரை யுருளாது நிற்கப் பணித்தவன்
    சிறுதே ருருட்டியருளே

பேய் தசையை அம்பிலே கோத்துத் தலைமயிரைத் தீக்கொழுந்தென்று எண்ணி அதன்கண் காட்டியது. அளறு - சேறு.

    442. இரத்த வெள்ளத்தில் மூழ்கிச் செல்லும் யானையொன்றை ஒருபேய் குடராகிய வலையை வீசி இழுத்தற்குத் தொடங்க, அப்பொழுது ஒரு நரி அதனைஇழுக்கவே அப்பேய் அலறியது.

    (அடி, 1) பங்கி - ஆண் தலைமயில். பங்கித் தலையாகிய கமலவனம்; தலைமயிர் செந்நிறமுள்ளதாதலின் கமலவனமாக உருவகித்தார். மகர மீன் - ஒருவகை மீன்.

    (2) குடராகிய பெருவலை. குறுநரி யானையை ஈர்ப்ப; “காலாழ் களரி னரியடுங் கண்ணஞ்சா. வேலாண் முகத்த களிறு” (குறள், 500.) அலறியது குறட்பேய். வீரர்: முருகக் கடவுளது படையிலுள்ள வீரர்.

    (3) ஒருவன் - திருமால். கரிக்கு - கசேந்திரனுக்கு. ஏய்த்தற்கு இடமாகிய பறந்தலையில். மறம் - வீரச்செயல். சூர் - சூரபன்பன்.

    (3-4) இந்திர ஞாலத்திண்டேர்: “மண்டனக்கா யிரகோடி யண்டங்களுளவாகு மற்றவற்றுள், அண்டமோ ராயிரத்தெட்டுகநூற்றெட் டாள்கவென வருளா னல்கி, எண்டொகைபெற் றிடுகின்ற வவ்வண்டப் பரப்பெங்கு மேகும் வண்ணம், திண்டிறல் பெற்றிடுகின்ற விந்திரஞா லமதென்