பக்கம் எண் :

முத்துக்குமார சுவாமி பிள்ளைத்தமிழ்333

திருவளர வளர்கந்த புரிவள ரிளங்குமர
சிறுதே ருருட்டியருளே.    
(3)

443.
பைங்கட் சிறைக்கால் கடைக்கால் செயக்கிரிகள் 
    விரிசிறை படைத்தெழுவபோற் 
படருந்தன் வேகத்தி னொக்கப் பறக்கப் 
    பறந்தலைச் செந்தலையறும் 
வெங்கட் டயித்திய ருடற்குறை தலைக்குறை 
    விரைந்துயி ரினைத்தொடர்ந்து 
மீச்செல்லு மாச்செல் லெனச்செலப் பூமாரி 
    விண்டூர்ப்ப தெனவுடுவுகப் 
பொங்கற் கடற்குட்ட மட்டதிக் குந்தமிற் 
    போர்செயப் பார்கவிழவெம் 
பொறியுடற் சேடன் படந்தூக்கி யார்க்கும் 
    புகைப்படல வடவாமுகச் 
செங்கட் பசுந்தோகை வாம்பரி யுகைத்தவன் 
    சிறுதே ருருட்டியருளே 
திருவளர வளர்கந்த புரிவள ரிளங்குமர 
   சிறுதே ருருட்டியருளே.    
(4)

னுந் தேரு தல்கி” (கந்த. வரம்பெறு. 21);இந்த்ரஞாலம் - இந்திர ஜாலம்; முருகக் கடவுள் சூரபன்மனுக்குரிய இந்திரஞாலத் தேரை நிற்கப் பணித்தமை, “தொல்லையில் வரம்பெறு சூரன் றன்புடை, செல்லலை யாங்கவன் முடிகை திண்ணமால், மல்லலந் திருவுடை மாயத் தேரை நீ, நில்லிவ ணென்றன னிகரி லாணையான்”,: ‘..................பாண்டிலந்தேரது பணியினின்றதே’ (கந்த. சூரபன்பன்வதைப். 348 -9) என்றவற்றால் உணரலாகும்.

    443. முருகக் கடவுளின் வாகனமாகிய மயிலின் செயல் கூறப்படும்.

    (அடி, 1) பைங்கண் சிறை கால் - பசிய கண்களையுடைய சிறகினால் உண்டாகிய காற்று. கண்ணென்றது பீலிக் கண்களை; “ஓடா நின்ற களிமயிலே .........ஆயிரங்கண் ணுடையாய்க் கொளிக்கு மாறுண்டோ” (கம்ப. பம்பைப். 27.) கடைக்கால் - யுகாந்த காலக் காற்று. கிரிகள் பறக்க.

    (2) தயித்தியர் உடற்குறை தலைக்குறை - அசுரர்களுடைய தலையற்ற உடலும், உடலிலிருந்து அற்ற தலையும். அவை உடலிலிருந்து பிரிந்து சென்ற உயிரைத் தேடிச் செல்வனபோல மேலே செல்ல. மாசெல் என - கருமேகத்தைப்போல.

    (3) கடற்குட்டம்: (நான்மணிக். 18.) வடவாமுகம் - வடவைத்தீ; மயிலின் கண்ணிலிருந்து தோன்றுவது.

    (4) தோகை வாம்பரி - மயிலாகிய தாவும் குதிரையை.