பக்கம் எண் :

334குமரகுருபரசுவாமிகள் பிரபந்தத் திரட்டு

444.
நெய்வைத்த கூந்தற் பிடிக்குதவ நாற்கோட்டு
    நிகளத் தடங்குன்றுவான்
நிமிருங் கதிர்க்குலைச் செந்நெலைப் பாகுபடு
    நெட்டிலைக் கன்னல்கொலெனாக்
கைவைத் திடப்பரி முகஞ்செய்து வெய்யோன்
    கடும்பரியை நட்புகொளும்
கழனிவிரி காவிரித் திருநாட கற்பகக்
    காட்டிற் பிறந்துபிரியா
மெய்வைத்த காதன்மை யரமகளிர் பேராய
    வெள்ளந் திளைத்தாடியோர்
மென்னடைக் கேக்கற்ற பிடிபின் பிடிக்கமுலை
    வேழங்க ளுடனுலாவும்
தெய்வப் பிடிக்குக் கிடைத்தொரு மழகளிறு
    சிறுதே ருருட்டியருளே
திருவளர வளர்கந்த புரிவள ரிளங்குமர
    சிறுதே ருருட்டியருளே.    
(5)

445.
பற்றுவிற் காமன் கொடிப்படைக் கூரெலாம்
    படைவீடு கயல்கடாவும்
பழனங்க ளோவத்ர சாலைபூஞ் சோலைப்
    பரப்பெலாங் காற்றேரொடும்

    444. இச்செய்யுளில் முருகக் கடவுள் தெய்வயானையம்மையை மணந்த சிறப்புக் கூறப்படும்.

    (அடி, 1-2) நெற்பயிரின் தன்மை. ஐராவதம் தன்பிடியின் பசியைத் தீர்ப்பதற்காக இவ்வூர் வயலிற் றோன்றிய நெற்கதிரைக் கரும்பென்று திரைத்து வளைத்தது.

    நெய் வைத்தவென்றது கூந்தலென்னும் பொதுமைபற்றிக் கூறியது. நாற்கோட்டு நிகளத் தடங்குன்று - ஐராவதம்; நிகளம் - கால்தளை. பாகுபடு கன்னல், நெட்டிலைக் கன்னலென்க; பாகு - வெல்லப்பாகு. ஈண்டுள்ள நெற்கதில் வானுலகளவும் வளர்தலின் அதன்பால் ஐராவதம் கை வைத்தது. அக்கதிர் வளைந்து குதிரை முகத்தைப் போன்ற தோற்றத்தை உண்டாக்கியது; “கதிர்ச்சாலி, சூடறுப் புண்ட வெனக்கழுத் தறுப்புண்ட துரகம்” (கம்ப. கரன்வதைப். 149.)
    445. சோணாடு மன்மதனுக்குரிய படைவீடு முதலியவற்றை உடையதாயினும் மருதத்திணைக்குரிய இந்திரனால் ஆளப்படுவதென்பது கூறப்படும்.

    (அடி, 1) காமன் கொடிப்படை - காமனது கொடியையுடைய படையாகிய மகளிர். பழனங்கள் - வயல்கள். காமனுக்குரிய அம்பாகிய தாமரை முதலியன வளர்தலின், அவை அத்திர சாலையாயின. கால்தேர் - தென்றற் காற்றாகிய தேர்.