| கொற்றவங் கங்குற் கடாயானை யுங்கட்டு | | கூடமே யெனினுமருதக் | | கோமகன் குடிகொண்ட சோணாட சேணாடு | | குங்குமங் கொட்டுதிண்டோட் | | பொற்றடங் குன்றினிரு கொங்கைப் பொருப்புமொரு | | பூங்குழற் காடும்வெயில்கால் | | புனைமணிக் கலையல்குன் மாக்கடலு மேந்தியொர் | | புனத்தின்கண் மிகநுடங்கும் | | சிற்றிடைக் கொல்குமென் கொடிபடர நின்றவன் | | சிறுதே ருருட்டியருளே | | திருவளர வளர்கந்த புரிவள ரிளங்குமர | | |
446. | கோல்பாய் பசும்புண் ணசும்புகும் பத்தடங் | | குன்றுகவுண் மடைதிறந்து | | கொட்டுநெட் டருவியொடு தேனருவி யுந்திரை | | கொழித்துடன் கோப்பமேதிப் | | பால்பாய் பெருக்கா றுவட்டெழுத றன்றுணைப் | | பாவைய ரொடுங்குறுகுமப் | | பாகீ ரதிக்குநிகர் தண்டுறை தொறுந்திசைப் | | பாலர்மேற் படையெடுத்து |
(2) கங்குலாகிய கடாயானை; சோலை, வெயில் நுழைதற்கியலாதபடி செறிந்து இருளுடையதாயிருத்தலின் அதனைக் கங்குற் கடாயானை கட்டுங் கூடமென்றார். மருதக் கோமகன் - மருதநிலக் கடவுளாகிய இந்திரன்; மருதத் திணையாகிய தெய்வமெனினும் ஆம். சேணாடு தோள்.
(3) கொங்கைப் பொருப்பும் கூந்தற்காடும்: 701. புனம் - தினைக் கொல்லை.
(4) கொடி - வள்ளி நாயகி.
திண்டோளாகிய தடங்குன்றிற் (3) கொடிபடர நின்றவன் (4) என்க. குன்றிற் கொடி படரவென்றது ஒரு நயம்.
446. (அடி, 1-2) யானையின் மதநீரும் தேனும் பாலும் கலந்து ஓடும் பெருக்குக்குக் கங்கை, யமுனை, சரசுவதியாகிய திருவேணி சங்கமம் உவமை.
கும்பத் தடங்குன்று - யானை. நெட்டருவியென்றது மதநீர்ப் பெருக்கை. இது கரிய நிறமுடையதாதலின் கரிய நீரையுடைய யமுனையைப் போன்றது;” கருங்கட மூன்றுகு நால்வாய்க்கரிய” (திருச்சிற். 55.) தேரமுவி செந்நிறமுடைமையின் சோணைந்தியை ஒத்தது. மேதிப்பால் - எருமையின்பால். உவட்டெழுதல் - பெருகுதல். பால் ஆறு கங்கையை ஒத்தது. தன் துணைப்பாவையர் - யமுனையும் சோணையும்; தன்னென்றது கங்காநதியை. (பி-ம்.) ‘தொறுந்துக்குப்’.
|