| வேல்பாய் நெடுங்கட் கடற்றானை யொடுமொருவன் | | மேற்செல்ல நாற்றிசையிலும் | | வெற்றிக் கயற்கொடி யெடுத்தென வெடுத்தெறியும் | | வெண்டிரை கிழித்துவெடிபோம் | | சேல்பாய் தடம்பணை யுடுத்தகா விரிநாட | | சிறுதே ருருட்டியருளே | | திருவளர வளர்கந்த புரிவள ரிளங்குமர | | |
447. | மீத்தந்த மாகத்து மேகத்தி னோடுமுடு | | மீனியரியல் போகவுகளும் | | வெடிவாளை மதியக டுடைத்தூற்று தெள்ளமுத | | வெள்ளருவி யாற்பசுந்தண் | | காத்தந்த சண்பகப் பூவேரி மாரிசெய் | | காவேரி யாயிரமுகக் | | கங்கையா கச்செய்து மீட்டுநாற் கோட்டுவெங் | | களிறுபிளி றத்தாவிவான் | | பூத்தந்த கற்பகக் காட்டினை யுழக்கிவிரி | | பொற்றா தெழுப்பிமற்றப் | | பூந்துகட் படலத்தி னாறைறெய்வ நதியையும் | | பொன்னிந்தி யாகச்செய்யும் | | தேதந்த தண்பணையு டுத்ததீம் புன்னாட | | சிறுதே ருருட்டியருளே | | திருவிளர வளர்கந்த புரிவள ரிளங்குமர | | |
(3) நெடுங்கட் கடற்றானை - நெடிய கண்ணையுடைய மகளிராலாகிய கடல்போன்ற படை. ஒருவன் - காமன். வெடிபோம் - துள்ளும். சேல் மீன் மன்மதனது கயற்கொடிக்கு உவமை.
447. வாளைமீனின் செயல் கூறப்படும்.
(அடி, 1) மீத்தந்த மாகத்து - மேலேயுள்ள வானத்தில் இருக்கும். இரியல்போக - கெட்டு நீங்க. வாளை: எழுவாய்.
(1-2) மதியிலிருந்து வீழும் அமுத தாரையால் காவிரிநீர் வெண்ணிறர் பெற்றுக் கங்கைபோலாயிற்று. காத்தந்த சண்பகப்பூ வேரி மாரி செய் - சோலையினால் தரப்பெற்ற சண்பகப்பூவின் தேன் மழைபோலச் சொரியப்பெற்ற. ஆயிரமுகக் கங்கை: கங்கைக்கு ஆயிரமுகம் இருப்பதாகக் கூறுதல் மரபு; “கங்கை, துறைகொ ளாயிர முகமுஞ் சுழல” (கல்லாடம்); “ஆயிர முகத்துந்தி பாலனும்” (வேளைக்காரன் வகுப்பு.)
|