448. | கள்ளவிழ் நறுங்கொடிகள் கமுகிற் படர்ந்துபூங் | | கற்பகத் தும்படர்தலாற் | | காமன் பெருஞ்செல்வ மன்னவர்கள் குழுமியக் | | கமுகின் கழுத்தில்யாத்த | | ஒள்ளொளிய செம்மணிப் பொன்னூசல் பன்முறை | | உதைந்தாட வாடுந்தொறும் | | ஒண்கமு கொடுந்துணர்ப் பைங்கற் பகக்காடும் | | ஒக்கவசை யத்தலையசைத் | | தள்ளிலை யலங்கல்வே லெம்பிரா னைப்பாடி | | ஆடுகின் றாரெனத்தாம் | | அலர்மாரி பொழிவபோ லங்கற் பகத்தெய்வம் | | அம்பொன்மலர் மாரிதூருக்கும் | | தெள்ளுதமிழ் விரிபுனற் காவிரித் திருநாட | | சிறுதே ருருட்டியருளே | | திருவளர வளர்கந்த புரிவள ரிளங்குமர | | |
449. | வாராட்டு தடமுலைப் பாலொழுகி வழிவதென | | மணிமுறுவ னிலவுகாலும் | | மழலைவாய் முத்துண்டு முச்சிமோந் துந்திரு | | மடித்தலத் தினிலிருத்திப் |
448. உயர்ந்த கமுகிலே படர்ந்த பூங்கொடிகள் அயலிலுள்ள கற்பக மரத்திலும் படர்ந்திருத்தலின், மகளிர் அக்கமுகில் ஊசலைப் பிணித்து ஆடும்பொழுது அக்கமுகு அசையவே அதனால் கற்பகமும் அசைந்து மலரை உகுத்தல் அம்மகளிர் முருகக் கடவுளைப் பாடியாடுவதற்கு மகிழ்ந்து மலர்மாரி பெய்வது போன்று இருந்தது. (அடி, 1) காமன் பெருஞ்செல்வம் அன்னவர்கள் - மகளிர். யாத்த - கட்டிய.
(2) துணர் - பூங்கொத்து. (3) அள்இலை - செறிந்த இலை.
449. (அடி, 1) மணிமுறுவல் - முத்தைப்போன்ற நகை. முத்துண்டு - முத்தமிட்டும்.
|