பக்கம் எண் :

338குமரகுருபரசுவாமிகள் பிரபந்தத் திரட்டு

பாராட்டி யுந்தமது கண்மணிப் பாவைநின்
    படிவமா கக்காட்டியிப்
பாலரொடுத் விளையா டெனப்பணித் துந்தங்கள்
    பார்வைகளி யாடச்செயும்
தாராட்டு மதிமுடித் தீராத வினைதீர்த்த
    தம்பிரா னுந்தம்பிரான்
தழலுருவி லொருபாதி குளிரவொரு புறநின்ற
    தையனா யகியும்வைத்துச்
சீராட்டி விளையாடு சேனா பதிக்கடவுள்
    சிறுதே ருருட்டியருளே
திருவளர வளர்கந்த புரிவள ரிளங்குமர
    சிறுதே ருருட்டியருளே.    
(10)

முத்துக்குமாரசுவாமி பிள்ளைத்தமிழ் முற்றிற்று.


    (2) கண்மணிப்பாவை - கண்மணியினுள் தோன்றும் பாவை.

    (3) தீராத வினைதீர்த்த தம்பிரான் - புள்ளிருக்கு வேளூர் வைத்தியநாதக் கடவுள் (361.) தையனாயகி - ஸ்ரீபாலாம்பிகை.

    (4) சேனாபதிக் கடவுள் - தேவசேனாபதியாகிய கடவுளே.