பக்கம் எண் :

சிதம்பர மும்மணிக்கோவை339

சிதம்பர மும்மணிக்கோவை

450.
செம்மணிக்கோ வைக்கதிர்சூழ் தில்லைச்சிற் றம்பலவன்
மும்மணிக்கோ வைக்குவந்து முன்னிற்கும் - எம்மணிக்கோ
அஞ்சக் கரக்கற்ப கத்தா ரிறைஞ்சுமஞ்சு
கஞ்சக் கரக்கற்ப கம்.    
(1)

 நேரிசையாசிரியப்பா
451.
பூமலி கற்பகப் புத்தேள் வைப்பும்
நாமநீர் வரைப்பி னானில வளாகமும்
ஏனைப் புவனமு மெண்ணீங் குயிரும்

    450. செம்மணிக் கோவைக் கதிர் சூழ் - செம்மையாகிய மாணிக்க மாலைகளின் ஒளி சூழ்கின்ற; இது தில்லைச் சிற்றம்பலத்திற்கு அடை. மும்மணிக் கோவை - மூன்று வேறு மணிகள் மிடைந்த கோவையைப் போல மூன்று வேறு செய்யுட்களால் அந்தாதித் தொடையமையப் பாடப்படும் பிரபந்தம்; “முத்தின ருத்தியர் மும்மணிக் காசினர்”, “முத்த வள்ளியொடு மும்மணி சுடர”, “மும்மணிக் காசும் பன்மணித் தாலியும்” (பெருங். 1, 34:121, 203; 5. 9:49) என்பவற்றில் மும்மணியமைந்த ஓராபரணம் கூறப்படுதல் காண்க. அம் மும்மணியாவன: புருடராகம், வைடூரியம், கோமேதகமென்பன; “மும்மணியா வனசொன்ன புருடராகம், உறுவயிடூ ரியங்கோமே தகமே யென்றாங் கோதுவர்” (திருவால. 26:22) மும்மணிக் கோவைக்கு - மும்மணிக் கோவையைப் பாடுவதற்கு. எம்மணிக்கோ - நீலமணி நிறமுடைய எம்முடைய திருமால்; கவுத்துவ மணியையுடைய எம் திருமாலெனலுமாம். அஞ்சம் கரன் - அன்னக் கொடியைக் கையிலேயுடைய பிரமதேவர்; அஞ்சம் - அன்னம். கற்பகத்தான் - இந்திரன். மணிக்கோ, அஞ்சக்கரன், கற்பகத்தானாகிய இவர்கள் இறைஞ்சுமென்க; அஞ்சக்கரக் கற்பகத்தாரென்றது கபிலபரணரென்பது போல நின்றது. அஞ்சு கஞ்சக்கரக் கற்பகம் - தாமரை மலரைப்போன்ற ஐந்து திருக்கரங்களையுடைய கற்பக விநாயகர். கற்பகம் முன்னிற்க மென்க.

    451. இதில் முதற்பன்னிரண்டடிகளில் நடராசமூர்த்தி ஐவகைத் தொழில்களையும் நிகழ்த்துமாறு கூறப்படும்.

    (அடி, 1-4) புத்தேள் வைப்பு - தேவலோகம், வளாகம் - பரப்பு.

    (பி-ம்.) ‘ஏனைய புவனமும்’. எண் நீங்கு உயிரும் - எண்ணற்ற