| தானே வகுத்ததுன் றமருகக் கரமே | 5 | தனித்தனி வகுத்த சராசரப் பகுதி | | அனைத்தையுங் காப்பதுன் னமைத்தபொற் கரமே | | தோற்றுப் நின்றவத் தொல்லுல கடங்கலும் | | மாற்றுவ தாரழல் வைத்ததோர் கரமே | | ஈட்டிய வினைப்பய னெவற்றையு மறைத்துநின் | 10 | றூட்டுவ தாகுநின் னூன்றிய பதமே | | அடுத்தவின் னுயிர்கட் களவில்பே ரின்பம் | | கொடுப்பது முதல்வநின் குஞ்சித பதமே | | இத்தொழி லைந்துநின் மெத்தொழி லாகப் | | பாலுண் குழவி பசுங்குடர் பொறாதென |
உயிர்த்தொகுதிகளும்.தானே - பிறருதவியின்றித் தானாகவே. வகுத்தது - சிருட்டி செய்தது. தமருகக்கரம் - உடுக்கையைத் தாங்கிய திருக்கரம். உயிரென்றது இங்கே ஆகுபெயரால் அதற்கிடமாகிய உடம்பைக் குறித்தது, படைக்கப் படுவது உடம்பேயாதலின்; “உயிர்முன் புடைப்ப” (சிலப். 15: 86) என்பதனையும் அதற்கு அரும்பதவுரைக்காரர், ‘உயிரென்றது ஆகுபெயரான் உடம்பை’ என்றெழுதிய உரையையும் காண்க.
(5-6) அமைத்த பொற்கரம் - அபயத்திருக்கை. (பி-ம்.) ‘அமைத்தகைத் தலமே.
(7-8) அடங்கலும் - முற்றும். மாற்றுவது - சங்காரம் செய்வது. அழல் வைத்ததோர் கரம் - அக்கினியை ஏந்திழ திருக்கரம். (பி-ம்.) ‘அழலமைத்ததோர் கரமே’. (9-10) இவ்வடிகளில் திரோபவம் (மறைப்பு) கூறப்படும். ஊட்டுவது - நுகரச்செய்வது.
(11-22) குஞ்சித பதம் - வளைந்த திருவடி; என்றது தூக்கிய பாதத்தை. அத்திருவடி அநுக்கிரகத் தொழில் புரிவது.
(1-13) நடராசப் பெருமான் தம் திருநடனக் கோலத்தில் ஐந்தொழில் கூறப்பட்டது; “தோற்றந்துடியதனிற் றோன்றுந் திதியமைப்பிற், சாற்றியிடு மங்கியிலே சங்காரம் ஊற்றமாய், ஊன்று மலர்ப் பதத்தே வுற்ற திரோதமுத்தி, நான்ற மலர்ப்பதத்தே நாடு” (உண்மை விளக்கம், 35.) (14-21) குழந்தையின் குடர் மருந்தைச் சீரணிக்கும் சக்தி யற்றதென்று தான் உண்டு அதன் பயனைப் பாலின்வழியே அக் குழந்தை பெறும்படி செய்யும் தாயைப் போல, அம்பிகை நடராசமூர்த்தியின் திரு நடனத்தைத் தான் தரிசித்து அதன் பயனை உயிர்கள் நுகரவைப்பவள்.
|