பக்கம் எண் :

சிதம்பர மும்மணிக்கோவை341

15
நோயுண் மருந்து தாயுண் டாங்கு
மன்னுயிர்த் தொகுதிக் கின்னருள் கிடைப்ப
வையமீன் றளித்த தெய்வக் கற்பின்
அருள்சூற் கொண்ட வையரித் தடங்கட்
டிருமாண் சாயற் றிருந்திழை காணச்
20
சிற்சபை பொலியத் திருநடம் புரியும்
அற்புதக் கூத்தநின் னமுதவாக் களித்த
நல்லற நூல்களிற் சொல்லறம் பலசில
இல்லறந் துறவற மெனச்சிறந் தனவே
அந்நிலை யிரண்டினுண் முன்னது கிளப்பிற்
25
கற்றநூற் றுறைபோய்க் கடிமனைக் கிழவன்
நற்குண நிறைந்த கற்புடை மனைவியோ
டன்பு மருளுந் தாங்கி யின்சொலின்
விருந்து புறந்தந் தருந்தவர்ப் பேணி
ஐவகை வேள்வியு மாற்றி யிவ்வகை
30
நல்லற நிரப்பிப் பல்புகழ் நிறீஇப்
பிறன்மனை நயவா னறன்மனை வாழ்க்கைக்கு
வரையா நாளின் மகப்பேறு குறித்துப்
பெருநலந் துய்க்கும் பெற்றித் தன்றே

    பசுங்குடர் - இளங்குடல். நோயுண் மருந்து - நோயை அழிக்கும் மருந்தை. அருள் சூற்கொண்ட கண்: 24-8. சாயல் - மென்மை. திருந்திழை - சிவகாமவல்லி. அற்புதக் கூத்த - ஞானநடனம் புரிவோய்.

    குழந்தையின் பொருட்டுத் தாய் மருந்து உட்கொள்ளல்: “நீற்றினை யணிந்ததுவெ னின்னிறைவ னென்றே, சாற்றினை யுயிர்க்கிடர் தணிப்பதென வெண்ணாய்,. தோற்றியுள தம்புதல்வர் துன்பமுறு மந்நோய், மாற்றும்வகை யன்னைய ரருந்திய மருந்தாம்” (திருவாதவூரர், புத்தரை வாதில் வென்ற, 76); “இளங்குழவிப் பிணிக்கீன்ற தாய்மருந்து நுகர்வதுபோ லிருளின் மாண்ட, களங்குலவு மலமுயிர்கட் கொழியவரு ண்டங் காணுங் கடன்மீக் கொண்டு, வளங்குலவு தனது பெருங் கற்புமொரு கணவரிறை மாண்புந் தோன்ற, விங்குமிர ணியமன்றி னின்றருளு மணிவிளக்கை விளம்பி வாழ்வாம்” (திருவானைக்காப். கடவுள். 7); ‘புதல்வனது பிணிக்குத் தாய் மருந்துண்டாற் போலத் தொழுதெழுவார் வினைக்குத் தான் நீறணிந்தா னென்பாரு முளர்’ (திருச்சிற். 118, பேர்.)

    (22) சில - இரண்டு (105.)

    (24-33) இல்லறத்தின் இலக்கணம்.

    முன்னது - இல்லறர். அன்பு தொடர்புடையாரிடத்துச் செல்வது. அருள் யாவர்மாட்டுஞ் செல்வது. இவ்விரண்டும் இல்லறத்தாருக்குரிய