| மடலவிழ் துளபந றாவெடுத் தூற்றிட | | மழகளி றெனவெழு கார்முகச் சூற்புயல் | | வரவரு மிளையகு மாரியைக் கோட்டெயில் | | மதுரையில் வளர்கவு மாரியைக் காக்கவே. |
வேறு 13. | அமரில் வெந்நிடும வுதியர் பின்னிடுமொர | | அபயர் முன்னிடுவ னத்தொக்க வோடவும் | | அளவு மெம்முடைய திறையி தென்னமுடி | | அரச ரெண்ணிலரொர் முற்றத்து வாடவும் | | அகில மன்னரவர் திசையின் மன்னரிவர் | | அமர ரென்னுமுரை திக்கெட்டு மூடவும் | | அமுத வெண்மதியின் மரபை யுன்னியுனி | | அலரி யண்ணன்முழு வெப்பத்து மூழ்கவும் |
(3-4) பாடிடக் கேட்டு உடைகின்ற மடலவிழ்கின்ற துளபம்; வண்டு இசைபாடப் போது மலருமென்பது இங்கே அறிதற்குரியது. கார்முகம் - வில். சூற்புயல் - திருமால். வர வரும் - அவர் முன் வரத் தான் பின்னே தோற்றிய; அம்பிகையைத் திருமாலுக்குத் தங்கையென்றல் மரபு (22-3.) கோட்டு எயில் - சிகரங்களையுடைய மதில்.
13. (சந்தக் குழிப்பு.) தனன தன்னதன தனன தன்னதன தனன தன்னதன தத்தத்த தானன.
(அடி, 1) வெந் இடும் - புறங்காட்டும். அஉதியர் - அந்தச் சேரர்; அ.: உலகறி சுட்டு. அபயர் - சோழர். தோற்றவர் காட்டில் ஓடி ஒளித்தல் மரபு; வனம் - காடு. அளவும் - அளக்கும் திறை - கப்பம். அரசர் முற்றத்து வாடுதல்: “பல்வேறு வகையிற் பணிந்த மன்னர் ................தொய்யா வெறுக்கையொடு துவன்றுபு குழீஇச், செவ்வி பார்க்குஞ் செழுநகர் முற்றத்து” (பெரும்பாண். 428-35); “வேந்தர் வைகு முற்றத்தான்” (கம்ப. குகப். 65.) அகில மன்னர் - பூமியில் உள்ள பல்வேறு தேசத்து அரசர். திசையின் மன்னர் - திக்குப் பாலகர். அலரியண்ணல் - சூரியன். வெப்பமென்றது அழுக்காற்றைக் குறித்தது. தன்னினும் ஒளியால் தாழ்வு பட்ட மதியின்மரபு அம்பிகையின் அவதாரத்தால் இத்தகைய சிறப்படைதல் பற்றிச் சூரியன் மனம் புழுங்கினான்; பாண்டியரது மரபு மதிமரமென்பது நினைத்தற்குரியது.
|