45 | ஐவகை யழலின் மெய்வருந்த வருந்தி | | இவ்வகை யொழுகு மியல்பிற் றன்றே, அதனால் | | இந்நிலை யிரண்டு மெம்மனோர்க் கியலா | | நன்னிலை யாகலி னந்நிலை நிற்றற் | | குரனு மாற்றலு மின்றி வெருவந் | 50 | தெளிதினிற் றமியனே னரியது பெறுதற் | | குளதோ நெறியொன் றுணர்த்துமி னீரென | | முத்தலந் தலங்களுண் முத்தித் தலமா | | இத்தல முடைத்தென விசைத்தனர் சிலரே | | அறிஞராங் குரைத்த வுறுதிக் கட்டுரை | 55 | உலகியல் வழக்கும் புலனெறி வழக்குமென் | | றிருவகை வழக்கினு நிலைபெற் றன்றே, அவற்றுள் |
(43-6) பனிக்காலத்தில் நீர்ப்பரப்பிலிருந்து குளிரைப் பொறுத்தலும் வேனிலில் அழலில் நின்று வெப்பத்தைப் பொறுத்தலும் தவமுடையோர் செயல்கள். ஐவகையழல் - பஞ்சாக்கினி.
(42-6) இவ்வடிகளிற் கூறப்பட்ட தவத்திற்குரிய செயல்களிற் சில சில பின்வருவனவற்றிலுங் காணப்படும்; “காயோடு நீடு கனியுண்டு வீசு கடுங்கா னுகர்ந்து நெடுங்கா லமைந்து, தீயோடு நின்று தவஞ்செய்ய வேண்டா” (திவ். பெரியதிரு.); ‘அவற்றுள் தவஞ்செய்வார்க்கு உரியன: ஊணசையின்மை, நீர் நசையின்மை, வெப்பம் பொறுத்தல், தட்பம் பொறுத்தல், இடம் வரையறுத்தல், ஆசனம் வரையறுத்தல், இடையிட்டு மொழிதல், வாயவாளாமை என எட்டும்; இவற்றிற்கு, உணவினும் நீரினும் சென்ற மனத்தைத் தடுத்தலும் ஐந்தீநாப்பணும் நீர்நிலையினும் நிற்றலும் ........................ பொருளென்றுணர்க’ (தொல். புறத். 20, ந.) “மாறாது சருகு தின்று சருகு பட்டீர் வாயுநுகர்ந் தேவாயுமௌன மானீர், ஆறாத தீயினிற்பீர் தீய ரேநும் மருந்தவமே தவம்” (அழகர்கலம். 14.) (49) உரன் - மனவலி; அறிவுமாம். ஆற்றல் - உடல்வன்மை.
(51) என - என்று அறிஞரைக் கேட்க.
(52-3) தலங்களுள் முத்தித்தலமாக முத்தலங்களை இத்தலம் உடைத்தென்க. முத்தலமென்றது பின்னே கூறும் ஆரூர், காசி, தில்லையென்பவற்றை; “காசியி லிறந்துங் கமலையிற் பிறந்தும், தேசமர் தில்லையுட் டிருநடங் கண்டும்” (அருணைக்கலம். 1). இதல்லம் - இந்தப் பூமி.
(55) உலகியல் வழக்கும் புலனெறி வழக்கும்: (தொல். அகத். 53); இவை உலக வழக்கு, செய்யுள் வழக்கெனவும் கூறப்படும்.
(56) நிலைபெற்றன்று - நிலைபெற்றது.
|