| ஆரூர்ப் பிறத்த னேர்படி னல்லது |
| செயற்கையி னெய்து மியற்கைய தன்றே, அதாஅன்று |
| காசியி லிறத்த னோக்கித் தேசம்விட் |
60 | டறந்தலைத் தந்த வரும்பொரு டாங்கிப் |
| பிறன்பொருள் கொள்ளாப் பேரறம் பூண்டு |
| கழிபெருங் கான நீங்கி வழியிடைத் |
| தீப்பசிக் கிரங்கி நோய்ப்பனிக் கொதுங்கிப் |
| பல்பிணிக்குடைந்து செல்லுங் காலத் |
65 | திடைச்சுரத் திறவா தின்னுயிர் தாங்கிக் |
| கிடைத்தன னாயி னடுத்தநல் லொழுக்கமோ |
| டுடல்விடு காறுமத் தடநகர் வைகி |
| முடிவது கடைபோக முடிவதோ வரிதே, அதனாற் |
| சிற்றுயிர்க் கிரங்கும் பெரும்பற்றப் புலியூர் |
70 | உற்றநின் றுருக்கூத் தொருகா னோக்கிப் |
| பரகதி பெறுவான் றிருமுன் பெய்தப் |
| பெற்றன னளியனேன் பற்றில னாயினும் |
| அன்பிலை கொடியையென் றருளா யல்லை |
| நின்பதம் வழங்குதி நிமலவென் றனக்கே |
75 | மருந்துண் வேட்கையன் மனமகிழ்ந் துண்ணினும் |
| அருந்துழி யொருவ னருவருப் புறீஇத் |
| தன்முகஞ் சுளித்துத் தலைநடுக் குற்றுக் |
| கண்ணீர் வீழ்த்துக் கலுழ்ந்தனன் மாந்தினும் |
| வாய்ப்புகு மாயினம் மருந்திரு வருக்கும் |
80 | தீப்பிணி மாற்றுத றிண்ணமே யன்றி |