பக்கம் எண் :

சிதம்பர மும்மணிக்கோவை345

நொதுமலும் பகையும் போக்கி யொருபொருள் 
விழுத்தகு கேண்மையோர்க் குதவல் 
வழக்குமன் றைய மன்றுடை யோர்க்கே.    
(2)

நேரிசை வெண்பா
452.
மன்றம் பொகுட்டா மதிலிதழா மாடங்கள்   
துன்றும் புயல்கள் சுரும்பராப் - பொன்றங்கும்   
நற்புண்ட ரீகமே யொக்கு நடராசன்   
பொற்புண்ட ரீக புரம்.    
(3)

கட்டளைக் கலித்துறை
453.
புரமொன் றிரண்டும் புகையழ லுண்ணப்புவனமுண்ணும்
சரமொன் றகிலஞ் சலிக்கவெய் தோய்சலி யாநடஞ்செய்
வரமொன் றிரண்டு மலர்த்தாளு மூன்றிற்றன் மாமகுடம்
பரமொன்று மென்றுகொல் லோகொண்டவாவப்பதஞ் சலியே.
(4)

    (81-3) நொதுமல் - அயல். வழக்கு - ஆன்றோர் மரபு. மன்றுடையோரென்றது ஆறங்கூறவையமுடையோரென்றும் நடனசபையை உடையோரென்றுத் இருபொருள்பட நின்றது.

    (69-83) ‘அடியேன் நின் திருக்கூத்தை ஒருகால் கும்பிட்ட மாத்திரத்தால்பரகதி பெறும் உரிமையுடையேனானேன். அறிந்தும் அறியாமலும் உண்பவர் இருவருக்கும் மருந்து பயனைத் தருவதுபோலக், கூத்தின் தரிசனம் அடியேன் குறையுடையேனாயினும் எனக்கு நன்மையைத் தருதல் வேண்டும்; அன்றியும்

    452. சிதம்பரத்திற்குத் தாமரை உவமிக்கப்படும்.

    மன்றம் - பொன்னம்பலம். பொகுட்டு - உட்கொட்டை. மாடங்களில் பொருந்தும் மேகங்கள் வண்டாக (548). பொன் - திருமகள். புண்டரீகபுரம்: சிதம்பரத்தின் திருநாமங்களுள் ஒன்று. பொன்னம்பலத்தைத் தாமரையோடு உவமிப்பர் (494).

    453. புரம் ஒன்று இரண்டும் - மூன்று புரங்களையும்; ஒன்றும் இரண்டுமென்று உம்மையை முன்னுங் கூட்டுக. புவனமுண்ணும் சரம் - திருமால். சலிக்க - நடுங்க. இரண்டு மலர்த்தாளும் ஊன்றின் - நிற்கும் திருக்கோலத்தோடு இரண்டு திருவடிகளையும் சிவபெருமான் ஊன்றினால். பதஞ்சலி முனிவர் ஆதிசேடனாதலின், இரண்டுதாளும் ஊன்றுதலினால் பாரம் பூமியில் உறைத்துப் பூமியைச் சுமக்கும் தமக்குத் துன்பஞ்செய்யுமென்று கருதியோ ஒரு காலைமட்டும் ஊன்றும் நடன தரிசனத்தை அம்முனிவர் விரும்பினார்? பரம் - பாரம். கொண்டவா - கொண்டவாறு. பதஞ்சலி வரமொன்று கொண்டவாறு பரம் ஒன்றும் என்றோ?