| தொக்கதன் வெறுக்கை சுருங்கித் தோன்ற | | இழப்புறு விழும மெய்தி யழுக்கறுத்து | | மற்றது பெறுதற் குற்றன தெரீஇ | 10 | அயிற்சுவை பெறாயன் றுயிற்சுவை யுறாஅன் | | மாணிழை மகளிர் தோணலங் கொளாஅன் | | சிறுகாற்று வழங்காப் பெருமூச் செறிந்து | | கவலையுற் றழிவதூஉங் காண்டும் விறகெடுத் | | தூர்தொறுஞ் சுமந்து விற்றுக் கூலிகொண்டு | 15 | புற்கையு மடகு மாந்தி மக்களொடு | | மனையும் பிறவு நோக்கி யயன்மனை | | முயற்சியின் மகனை யிழித்தன னெள்ளி | | எனக்கிணை யிலையென வினையன்மற் றொருவன் | | மனக்களிப் புறீஇ மகிழ்வதூஉங் காண்டும், அதனால் | 20 | செல்வ மென்பது சிந்தையி னிறைவே |
(8) இழபறு விழுமம் - ஒரு பொருளை இழத்தலைப் போன்ற துன்பம்; உறு: உவமவுருபு. அழுக்கறுத்து - பொறாமையுற்று. (9) மற்று: அசைநிலை. அது - அம் மிகுதியான பொருளை. உற்றன தெரீஇ - உரியவாக உற்ற உபாயங்களை ஆராய்ந்து. (10) அயிற்சுவை, துயிற்சுவை: 291. (12) சிறுகாற்று வழங்கா - முதலிய சிறு மூச்சு விட்டு. (பி-ம்.) ‘சிறுகாற்று வழங்கப்’. (5-13) “பெற்ற சிறுகப் பெறாத பெரிதுள்ளும், சிற்றுயிர்க் காக்க மரிதம்மா” (269) என்று முன்னர்க் கூறியது காண்க; “ஆசைக்கோ ரளவில்லை யகிலமெல் லாங்காட்டி யளினுங் கடன் மீதிலே - ஆணைசெலவே நினைவ ரளகேச னிகராக வம்பொன்மிக வைத்தபேரும், நேசித்து ரசவாத வித்தைக் கலைந்திடுவர்” (தாயு, பரிபூரணானந்தம். 10.) (13-9) (பி-ம்.) ‘காண்டு மதாஅன்று’. வறியவனாயினும் சிந்தை நிறைவுடையோன் இன்பம் பெறுதல் கூறப்படும். (15) புற்கை - புல்லரிசிக்கூழ். அடகு - இலை. (16) மனை - மனைவி. அயல் மனை - அடுத்த வீட்டிலுள்ள. (17) முயற்சி இல் மகனை - முயற்சி இல்லாத மனிதனை. (20) சிந்தையின் நிறைவு - திருப்தி.
|