பக்கம் எண் :

சிதம்பர மும்மணிக்கோவை371

வலனுயர் சிறப்பிற் புலியூர்க் கிழவநின்   
அருள்பெற் றுய்தற் குரிய னியானெனிற்   
35
பல்லுயிர்த் தொகுதியும் பவக்கட லழுந்த   
அல்லல் செய்யு மவாவென படுமவ்   
வறுமையி னின்றும் வாங்கி   
அறிவின் செல்வ மளித்தரு ளெனக்கே.           
(26)

நேரிசை வெண்பா
476.
என்செய்தீர் தில்லைவனத் தீசரே புன்முறுவல்  
முன்செய் தெயிளை முடியாமற் - கொன்செய்த  
பொற்புயங்க நாணேற்றிப் பொன்மலையைத் தேவரீர்  
மற்புயங்க ணோவ வளைத்து.    
(27)

கட்டளைக் கலித்துறை
477.
வள்ளக் கலச முலையெம் பிராட்டி வரிநயனக்
கள்ளச் சுரும்பர் களிக்கின்ற வாசடைக் காட்டிற்கங்கை
வெள்ளத்தை மேலிட்டு வெண்டா தணிந்து விராட்புருடன்
உள்ளக் கமலத்தி னூறுபைந் தேறலை யுண்டுகொண்டே.
(28)

    (35-6) பவக்கடல் - பிறவியாகிய கடல்; இவ்விரண்டடிகளின் கருத்து, “அவாவென்ப வெல்லா வுயிர்க்குமெஞ் ஞான்றும், தவாஅப் பிறப்பீனும் வித்து” என்னும் குறளைப் பின்பற்றியது.

    (36-7) அவா வெனப்படு மவ் வறுமை: 21-ஆம் அடியைப் பார்க்க.

    (37) “நுண்ணுணர் வின்மை வறுமை யஃதுடைமை, பண்ணப் பணைத்த பெருஞ்செல்வம்” (நாலடி. 251); “அறிவுடையாரெல்லா முடையார்” (குறள், 430) என்பராதலின் அறிவினைச் செல்வமாக்க் கூறினார்.

    476. எயிலை - திரிபுரங்களை, முடியாமல் - அழிக்காமல். பொன் புயங்கம் - பொலிவு பெற்ற பாம்பை. நாணேற்றி வில்லை வளைத்துப் பின்பு அம்பு எய்யாமல் நகைத்துப் புரமெரித்த நீர் வில்லைவளையாமலே அதனைச் செய்திருக்கலாமே என்பது கருத்து. தேவர்களின் செருக்கைக் கண்டு சிவபெருமான் வில்லை வளைத்தும் அம்பெய்யாமல் சிரிப்பினால் எரித்தாரென்பது வரலாறு; “சொல்லுக் கினிய கழுக்குன்ற ரேயுமைச் சொல்ல வென்றால், அல்லற் பிழைப்புப் பிழைத்துவிட் டீர்முப்பு ராதியர்மேல், வில்லைக் குனித்தெய்ய மாட்டாம னீரந்த வேளிதனிற், பல்லைத் திறந்து விட்டீரிது வோநும் படைத்தொழிலே”(தனிப்.) என்னும் செய்யுள் இங்கே நினைவுக்கு வருகிறது.

    477. வள்ளக்கலசமுலை: (633.) நயனமாகிய கள்ளச் சுரும்பர்; சுரும்பர் - வண்டு. களிகளகின்றவா - மகிழ்வது என்ன வியப்பு? மேல் இட்டு - மேலே தாங்கி. வெண்தாது - திருநீறு. விராட்புருடன் உள்ளக்