நேரிசையாசிரியப்பா 478. | கொண்டல்கண் படுக்குந் தண்டலை வளைஇத் | | தடம்பணை யுடுத்த மருத வைப்பின் | | இடம்புரி சுரிமுக வலம்புரி யீன்ற | | தெண்ணீர் நித்திலம் வெண்ணில வெறிப்ப | 5 | ஊற்றெழு தீம்புனல் பாற்கட லாக | | விரிதிரைச் சுருட்டே யரவணை யாகப் | | பாசடைக் குழாங்கள் பசுங்கதிர் விரிக்கும் | | தேசுகொண் மேனித் திருநிற னாகப் | | பொற்றாது பொதிந்த சேயிதழ்க் கமலம் | 10 | மலர்விழி முதல பலவுறுப் பாக |
கமலம் - சிற்றம்பலம்; “அவ்வண்ட வடிவினோர்க்குக், கொண்டவுளப் புண்டரிகம் புலியூரென் றருமறைகள் கூற லாலே, எண்டருபுண் டரிகவக மெனப்படும்ப் பதி” (சிதம்பரபுராணம்,சிதம்பரமான்மியச். 63.) தேறலென்றது ஸ்ரீ நடராச மூர்த்தியை; “கோதிலாத் தேறல் குனிக்குந் திருமன்றம்” (விக்கரமசோழனுலா.)
ஒரு காட்டில் ஒரு நதியின் வெள்ளத்தின்மேல் தாதுடையதாகி மலர்ந்த கமலத்தில் ஊறிய தேறலென்று வேறொரு பொருள் தோற்றியது. மு: 494.
478. (அடி, 1-14) தடாகத்திற்குத் திருமால் ஒப்பு.
(1) தண்டலை - சோலை. (2) தடம்பணை - பரந்த வயல்கள்.
(3) இடம்புரி - இடத்தை விரும்பிய. சுரிமுகம் - சுழித்த முகம்.
(4-5) நித்திலத்தின் ஒளியால் நீர் வெண்ணிறம் பெற்றுப் பாற்கடல் போலத் தோற்றியது.
(7-8) பாசடைக் குழாங்கள் - பசிய தாமரையிலையின் தொகுதி; அவை திருமாலின் திருமேனி நிறத்துக்கு உவமை; “செங்கமலத் தலர்போலுங் கண்கைகால் செங்கனிவாய், அக்கமலத் திலைபோலுந் திருமேனி யடிகளுக்கே” (திருவாய்மொழி, 9.7:3.)
(10) மலர்விழிமுதல் உறுப்பாவன: திருமுகம், திருவிழி, திருவாய், திருக்கரம், திருவுந்தி, திருவடியென்பன.
(7-10) “அடையிறந் தவிழ்ந்த வள்ளிதழ்த் தாமரை, அடியுங் கையுங்கண்ணும் வாயும்” (பரி, 13: 50-51); “மாயக் கூத்தா வமனா வினையேன் கண்ணா கண்கைகால், தூய செய்ய மலர்களாச் சோதிச் செவ்வாய் முகிழதாச், சாயல் சாமத் திருமேனி தண்பா சடையாத் தாமரைநீள், வாசத் தடம் போல் வருவானே” (திருவாய்மொழி, 8. 5. 1) திருவரங்ககலம். 73, திருவேங்கடமாலை, 8, பார்க்க.
|