பக்கம் எண் :

சிதம்பர மும்மணிக்கோவை373

அங்கணோர் வனசத் தரசுவீற் றிருக்கும்
செங்கா லன்னந் திருமக ளாகப்
பைந்துழாய் முகுந்தன் பள்ளிகொண் டன்ன
அந்தண் பூந்தட மளப்பிற சூழ்ந்து
15
பல்வளம் பயின்ற தில்லையம் பதியிற்
பொன்னின் மன்றிற் பூங்கழன் மிழற்ற
நன்னடம் புரியு ஞானக் கூத்த
ஒருபெரும் புலவனோ டூட றீரப்
பரவை வாய்தலிற் பாயிரு ணடுநாள்
20
ஏதமென் றுன்னா திருகா லொருகாற்
றூதிற் சென்றநின் றுணையடிக் கமலத்
தீதொன் றியம்புவல் கேண்மதி பெரும
அலையா மரபி னாணவக் கொடியெனும்
பலர்புகழ் சேரிப் பரத்தையொடு தழீஇ
25
ஏகலன் றணந்தாங் கென்னையு முணராது
மோகமொ டழுந்தி முயங்குறு மமையத்
தங்கவட் குரிய தங்கைய ரிருவருட்
குடிலை யென்னு மடவர லொருத்தி
எய்தரும் புதல்விய ரைவரைப் பெற்றனள்

    (18-19) ஒரு பெரும் புலவன் - சுந்தரமூர்த்தி நாயனார் (பி-ம்.) ‘தீர்ப்பப்’. பரவை - பரவையார்.

    (20) இருகால் - இரண்டுமுறை. ஒருகால் - ஒரு காலத்தில் “நள்ளிருள் யாமத்து நாவலர் பெருமான், தள்ளாக் காதலறிணித்தற் கம்ம, பரவை வாய்தலிற் பதமலர் சேப்ப, ஒருகா லல்ல விருகா னடந்தும்” “பரவைதன் மனைவயிற் பாவல னேவலின், இருமுறை திரிதலின்” (344, 518); “இருகாலுஞ் சந்துபோனால்” (தனிப்.)

    (23-4) ஆணவத்தைச் சேரிக்கரத்தையாக உருவகம் செய்தார்; சேரிப்பரத்தை பொதுமகளாதலின், ‘பலர்புகழ் சேரிப்பரத்தை’ என்றார்.

    (25) தணந்து ஏகலன் - பிரிந்து போகேனாகி.

    (28) குடிலை - சுத்தமாயை.

    (29) ஐவரென்றது சுத்தமாயையிற்றோன்றிய சிவத்ததுவமாகிய சுத்தவித்தை, ஈசுவரன், சதாக்கியம், சத்தி, சிவமென்னும் ஐந்தனையும் (பி-ம்.) ‘இருவரைப் பெற்றனள்’.