நேரிசை வெண்பா 479. | கூடுங் கதியொருகாற் கும்பிட்டாற் போதுமென | | நாடு மவிநயத்தை நண்ணிற்றால் - ஓடியகட் | | காடனார் காணவொரு கால்காட்டிக் கையமைத்து | | |
கட்டளைக் கலித்துறை 480. | நடிக்கச் சிவந்தது மன்றென் பிராட்டி நறுந்தளிக்கை | | பிடிக்கச் சிவந்தது மன்றுகொலாமெம் பிரானென்றும்பர் | | முடிக்கச் சிந்தன போலுங்கெட்டேன்புர மூன்றுமன்று | | பொடிக்கச் சிவந்த நகைத்தில்லை யான்மலர்ப் பூங்கழலே. |
சிதம்பர மும்மணிக்கோவை முற்றிற்று.
479. ஒருகாற் கும்பிட்டாற் போதும்; கதி கூடுமென மாற்றுக. ஒருகால் - ஒரு திருவடி, ஒருமுறை; சிலேடை. அவிநயம் - அங்கங்களால் தோற்றுவிக்கும் குறிப்பு. கண்காதனார் - கண்ணையே காதாகவுடைய பாம்பாகிய பதஞ்சலி முனிவர் (526). ஒரு கால் காட்டி - இடத்திருவடியாகிய குஞ்சித பதத்தைக்காட்டி. அமைத்த திருக்கரம் ஒரு திருவடியைச் சுட்டுவது போலவும், அபயத் திருக்கரம் போதுமென்ற குறிப்பைக் காட்டுவது போலவும் அமைந்தன.
480. நடராசப் பெருமான் திருவடிச்சிவப்புக்கு ஒரு காரணங் கற்பிக்கின்றார்.
சிவந்ததும் அன்று - சிவந்த செயலும் அன்று. உம்பர் - தேவர். முடிக்க - திருவடிகளை வணங்கி அவற்றைத் தலையில் அணியும் பூவாகக் கொள்ளுவதனால். கெட்டேன்: இரக்கக் குறிப்பு. பொடிக்க - பொடியாக்கும் பொருட்டு. சிவந்த - கோபித்த. நகை - சிரிப்பு. வெண்ணகையைச் சிவந்தநகையென்று கூறியது ஒரு நயம். கழல் - திருவடிகள். கழல் சிவந்தன போலும் என்க.
ஒரு திருவடியே ஊன்றி யிருத்தலின் அது மாத்திரம் சிவந்திருக்க வேண்டுமாதலின் இரண்டு திருவடிகளும் சிவத்தற்கு அது காரணமன்றென்றும், எம்பிராட்டியின் தளிரைப்போன்ற கைகள் சிவக்கும்படி செய்யாவாதலின் அவை பிடித்தது காரணமன்றெனும் கொள்க.
|