பக்கம் எண் :

376சிதம்பரச் செய்யுட்கோவை

சிதம்பர செய்யுட்கோவை

481.
பூங்கொன்றைக் கண்ணியான் பொன்மன் றிறைஞ்சிடுக
ஆங்கொன்றைக் கண்ணி யவர்.

    *இது சீர்முழுதும் எதுகையொன்றத் தொடுத்தமையால் தலையாகெதுகை. பூங்கொன்றைக் கண்ணியான் எனவும், பொன்மன்றிறைஞ்சிடுக எனவும் வெண்சீர் வெண்டளையும் இயற்சீர் வெண்டளையும் விரவிவருதலின், இஃது ஒழுகிசைச் செப்பலோசைத்து. இதனானே, வெண்பா இரண்டடிச் சிறுமையுடைத்தென்பதுஉங் கொள்க. இதனுள், கண்ணியவர் என்னும் ஒரு மொழியைக் கண்ணியெனவும் அவரெனவும் வகையளி செய்து சீர் கொள்ளப்படுதலின், இது மலரென்னும் வாய்ப்பாட்டான் முடிந்த ஒரு விகற்பக் குறள்வெண்பா.    
(1)

482.
அறனன்று மாதவ னென்ப துலகெந்தை
தாள்காணா னாணுக் கொள.

    இஃது இருவிகற்பக் குறள்வெண்பா. மோனை முதலிய தொடையும் தொடைவிகற்பமும் போலாது தொடுத்தமையால், இது செந்தொடை.    
(2)

483.
கண்ணுதல் காட்சி கிடைத்த விழிக்கில்லை
வெல்கூற்றின் றேற்றங் கொளல்

    இதுவுமது. அனுவெழுத்தால் இணைமோனையமைத்து, ஏனைத் தொடையும் தொடைவிகற்பமும் போலாது தொடுத்தமையால், இது மருட்செந்தொடை.    
(3)


    *இச் செய்யுளிலக்கணக் குறிப்புக்கள் நூலாசிரியராலே எழுதி அமைக்கப்பெற்றவை.

    481. கொன்றைப் பூவாகிய கண்ணியை உடையான். ஒன்றைக் கண்ணியவர் - வீடு பேற்றைக் கருதியவர்; ஒன்று - முத்தி; “உடன் முதலர், மருவிய மூன்றுங்கொண் டொன்றீவதற்கு வருத்தமென்னே: (அம்பலவாண தேசிகர் கலம்பகம்).

    482. திருமால் சிவபெருமானுடைய திருவடியைக் காணாதிருப்ப, அவரை மாதவனென்று கூறுதல் நியாயமன்று.

    மாதவன் - திருமகள் கணவனென்னும் பொருளையுடைய வடமொழித் தொடரைத் தமிழ்த்தொடர் மொழியாக வைத்துப் பெரிய தவத்தை. யுடையோனென்னும் பொருள் கொண்டு கூறினர். உலகு - உலகத்திலுள்ள சான்றோர். தாள்காணான் - திருமால். நாணுக்கொள - தனக்கு உரியதல்லாத பெருமையை ஏற்றிக் கூறுதல் பற்றி நாணத்தை யடைய. உலகு மாதவன் என்பது அறனன்றென்க.

    483. விழியென்றது இதனையுடையாரைக் கருதியது. வெல்கூற்று-