இதுவும் அவ்வாறே இருவிகற்பத்தால் நடந்தமையான், இருவிகற்பத்து இருகுறணேரிசைவெண்பா. அடிதோறும் இரண்டாமெழுத்து ஒன்றி வரத் தொடுத்தமையால் அடியெதுகை. இதனுள், முதற்றொடை இரண்டா மெழுத்து மாத்திரையே ஒன்றத் தொடுத்தமையால் இடையா கெதுகையுமாம்.
பிறரை வெல்லுங் கூற்று; அவனையும் இவர் வெல்வ ரென்றபடி. கொளல் இல்லையென்க.
484. கண்ணி - அடையாள மாலை. மாலை - திருமுடியிற் சுற்றப்பட்ட மாலை. ஆரம் - மார்பிலுள்ள முத்து மாலை. கச்சை - இடையிற் கட்டிய கச்சு; “கச்சையாவதொர் பாம்பினார்” (தே. திருஞா, திருநெல்வாயில்); “கச்சைசே ரரவர் போலும்” (தே. திருநா.) புயம் - திருக்கை. கங்கணம் - காப்பு.
485. கறை - விடம். திங்கள் - இங்கே பிறை. திங்கள் உமாதேவியாரின் யாண் மாசிலா வாண்முகங்கண் டேக்கற்றோ,...வளராவாறென்னோ மதி” (தண்டி, மேற்.) நடம் உவந்த - நடராசப் பெருமான் திருநடனத்தைத் தரிசித்து மகிழ்ந்த. காற்புலி - காலாற் புலியாகிய வியாக்கிரபாதர்; “காற்புலித்தோன் மயிர்முகிழ்ப்ப” (திருபெருந்ததுறைப். கடவுள்.6) அம்மான்; மான் - உமாதேவியரது, விழியாகிய மானை. கைம்மான் அஞ்சும். கையிலுள்ள மான் தன் பகையாகிய ஒரு புலிக்கு அஞ்சாமல் இனமாகிய மற்றொரு மானுக்கு ஆஞ்சுமென்றது நயம்.