பக்கம் எண் :

378குமரகுருபரசுவாமிகள் பிரபந்தத் திரட்டு

486.
வணங்கு சிறுமருங்குற் பேரமர்க்கண் மாதர்
அணங்கு புரிவ தறமாற் - பிணங்கி
நிணங்காலு முத்தலைவே னீள்சடையெங் கோமாற்
கிணங்காது போலு மிரவு.

    இது குறளிரண்டாய் முதற்குறள் ஈற்றின்கண் ஓராசிடையிட்டுத் தனிச்சொற் பெற்று ஒரு விகற்பமாய் நடத்தலான் ஒரு விகற்பத்து ஓராசிடை நேரிசைவெண்பா. இதனுள் முதலடி நடுவிருசீரும் முரணத் தொடுத்தமையால் இடைப்புணர் முரண். இது பிறப்பென்னும் வாய் பாட்டு முற்றுகர இயறசீரான் முடிந்தது.    
(6)

487.
வரத்திற் பிறப்பொன் ளருள்கெனினும் வள்ளல்    
கரத்திற் கபாலத்தைக் காணூப் - புரத்தை    
இரும்புண்ட ரீகபுரத் தெய்தினார்க் கீயான்    
அரும்புண்ட ரீகத் தயன்.    

    இதுவும் அவ்வாறே இருவிகற்பமாய் நடத்தாலான் இருவிகற் பத்து ஓராசிடை நேரிசை வெண்பா. இதனுள் முதலடி முதற் சீரும் ஈற்றுச் சீரும் முதலெழுத்து ஒன்றத் தொடுத்தமையால் ஒருஉமோனை.    
(7)


    486. வணங்கு - வளைந்த, மாதரணங்கு - விருப்பத்தையுடைய உமாதேவியார். (பி-ம்) ‘மாதர்க் கணங்கு’. பிணங்கி மாறுபட்டு முத்தலைவேல் - சூலப்படை, இணங்காது - பொருந்தாது. போலும்; அசைநிலை. இரவு - யாசித்தல். தன் மனையாள் அறங்களைப் புரியாநிற்ப, இரத்தல் இறைவனுக்குப் பொருத்தமுடைய செயலன்றென்றவாறு; 617-ஆம் செய்யுளிலும் இக்கருத்து அமைந்துள்ளது.

    487. பிறப்பு ஒன்று வரத்தின் அருள்கெனினும்; வரம் - வேண்டுகோள், “இன்னம் பாலிக்கு மோவிப் பிறவியே”,“மனித்தப் பிறவியும் வேண்டுவ தேயிந்த மாநிலத்தே” (தே. திருயா.) என்று வேண்டுவாரும் உளராதலை நினைந்து, பிறப்பொன்றருள்கெனினும்’ என்றார். வள்ளல் - சிவபெருமான்; முத்திச் செல்வத்தை வழங்குதலின், வள்ளலென்றார். கபாலம் - பிரமனது தலையோடு, காணூ - கண்டு (பி-ம்) ‘காணூஉ’. புரத்தை - உடம்பை, இரும்புண்டரீகபுரத்து - பெரிய சிதம்பரத்தின்கண், விராட்புருடனது இருதயகமலமாதலின் இத்தலத்துக்குப் புண்டரீகபுர மென்னும் திருநாமம் அமைந்தது. புண்டரீகத்து அயன் - வெண்டாமரை மலர் மேல் உள்ள பிரமதேவர். இறைவன் கரத்திற் கபாலத்தைக் கண்டு, அடியாருக்குப் பிறப்பையளித்தால் இறைவன் தண்டிப்பானென்னும் அச்சத்தால் பிரமன் உடம்பை ஈயானென்க, அயன் புரத்தை ஈயானென்க.