இதுவுமது. இதனுள் மூன்றாமடி இரண்டாஞ் சீரொழிந்து, ஏனை முச்சீரும் முதலெழுத்து ஒன்றத் தொடுத்தமையால் மேற்கதுவாய் மோனை. இதனுள்ளே போ என நெட்டெழுத்துத் தனியே நின்றும்’ து எனக் குற்றெழுத்துத் தனியே நின்றும், பூந் என நெட்டெழுத்து ஒற்றடுத்து நின்றும், தண் எனக் குற்றெழுத்து ஒற்றடுத்து நின்றும் நேரசை நான்கும் வந்தன. விரி எனக் குறில் இணைந்தும், நறா எனக் குறினெடில் இணைந்தும், பசுந் எனக் குறில் இணைந்து ஒற்றடுத்தும், துழாய் எனக் குறினெடில் இணைந்து ஒற்றடுத்தும் நிரையசை நான்கும் வந்தன. ஓரசைச்சீர் இரண்டனுள், பூ என நேரசைச்சீரும் வந்தவாறு காண்க. இது நாளென்னும் வாய்பாட்டான் முடிந்தது.
492. | புனலழுவம் புக்குடைந்தோர் தாளூன்றி நின்று |
| வனசங்காள் செய்தவநீர் வாழியரோ வாழி |
| பொருவிடையோன் றெய்வப் புலியூரை யொப்பாள் |
| திருமுகத்துக் கொப்பச் செயின். |
491. துழாய்ப்போதில் நறா விரிகின்ற தோள்; நறா - தேன். தேவன் - திருமால். தேவி - உமாதேவியார். காந்தன் - கணவன். சிவபெருமானுக்குத் திருமால் சத்தியென்பது சைவர் கொள்கை; “அரியலாற் றேவியில்லை யையனை யாற னார்க்கே” (தே. திருநா.); “நெடுமாயர் போலவே, தரைக் குளினி யாரியாவர் ..... மேவியிடத்திலுறை தேவி யாவரே” (அருணைக்கலம். 42). பாந்தள் முடிச்சூடும் பூ - பூமி. அதனைக் காமுறாரென்றது மீண்டும் இப்பூமியினிடத்தே பிறத்தலை விரும்பாரென்னும் பொருளினது. ஒருவகை மலர்களை விரும்பியவர் ஒருவர் சூடிய பூவை விரும்பாரென்றது ஒரு நயம்.
492. இது தலைவன் தலைவியின் நலம் பாராட்டியது.
புனலழுவம் - நீர்ப்பரப்பு. உடைந்து - மலர்ந்து; தோல்வி யுற்றென்பது வேறு பொருள்; தோற்றார் நீரில் புகுதல் இயல்பு; (பெருங். 3.24; 54-6; சிறுபஞ்ச. 41) ஓர் தாள் ஊன்றி - ஒரு தண்டை ஊன்றி; ஒற்றைக் காலை ஊன்றியென்பது வேறு பொருள். வனசங்காள் - தாமரை மலர்களே. நீர் செய்தவ மென்க. ஒப்பசெ செயின் - ஒக்கும்படி அத்தவத்தைச் செய்வீராயின். செயினென்பது செய்தலினருமையை விளக்கியபடி.
நீரில் இருத்தலும் மலர்தலும் ஒரு தண்டிற் பூத்தலுமாகிய தாமரையின் இயல்புகளை, நீர்நிலை நிற்றலும் உடல் மெலிதலும் ஒற்றைக்காலில் நிற்றலுமாகிய தவஞ்செய்வார் முயற்சிகளாகப் பொருள் தோற்றும்படி சொற்களை