பக்கம் எண் :

சிதம்பரச் செய்யுட்கோவை381

    இது பலவிகற்பத்து இன்னிசைவெண்பா. *தமிழ்வழக்கால் இருவிகற்பமும் பல விகப்றமெனப்பட்டது. இதன் முதலடி முதற் சீரிரண்டும் முதலெழுத்து ஒன்றிவரத் தொடுத்தமையால் இணைமோனை. இதுமுதற்றொடை ஓரெதுகைத்தாயும், ஏனைத்தொடை வேறோரெதுகைத்தாயும் வந்தமையால் இரண்டடியெதுகையென்க. இதனுள்ளே தாளூன்றி எனத் தேமாங்காயும், வனசங்காள் எனப் புனிமாங்காயும், புனலழுவம் எனக் கருவிளங் காயும், புக்குடைந்தோர் எனக் கூவிளங்காயுமாக வெண்சீர் நான்கும், செயின் என நிரையசைச்சீரும் வந்தன.    
(12)

493.
ஆதி முதலுணர்ந்தியா மன்புசெயப் பெற்றவா
ஓஒ பெரிது மரிதே யெளிதேயோ
வேதந் துறைசெய்தான் மெய்துணியான் கைதுணிந்தான்
பேதுற்றும் வேஃகேம் பிற.

    இதுவுமது. இதனுள் இரண்டாமடி ஈற்றுச்சீர் இரண்டும் முரணத் தொடுத்தமையால் கடையிணைமுரண். இதனுள்ளே ஆ என நெட்டெழுத்தும், தி எனக் குற்றெழுத்தும், ஆ என உயிரெழுத்தும், ஓஒ என அளபெடையெழுத்தும், வெஃகேம் என ஆய்தவெழுத்தும், உணர்ந்தியாம் எனக் குற்றியலிகரமும், அன்பு எனக் குற்றியலுகரமும், துறை என ஐகாரக்குறுக்கமும், வல்லெழுத்து மெல்லெழுத்து இடையெழுத்துக்களும், மெய்யும் உயிர் மெய்யுமாகிய அசைக்கு உறுப்பாமெழுத்துப் பதின்மூன்றுங் காண்க. முதலுணர்ந்தியாமெனக் கனிச்சீர் வெள்ளையின் விரவி வரலாகாமையிற் குற்றியலிகரம் அலகு பெறாதெனத் தள்ளிக் கருவிளங்காய் எனச் சீர்கொள்கழ ஐகாரம் கை எனக் குறுகாத வழி நெட்டெ.ழுத்தின் இயல்பிற்றாயும், துறை எனக் குறுகிய வழிக் குற்றெழுத்தின் இயல்பிற்றாயும் நின்றவாறு காண்க.    
(13)


    அமைத்தது ஒரு நயம். “தண்டுறைநீர் நின்ற தவத்தா லளிமருவு, புண்டரிக நின்வதனம் போன்றதால்” (தண்டி. 87, மேற்); “சங்கந் துறந்தன்னமில்லாம லேயொரு தாளினின்று, பொங்கம் புனலிற் றவம்புரிந்தாலும்” (வெங்கைக். 63.)

    *”ஒன்றல் லவைபல தமிழ்நடை வடநூல், இரண்டல்லவைபல வென்றிசி னோரே” (யா. கா. 25, மேற்.)

    493. மும்மூர்த்திகளையும் மும்முதலென்பராதலின் அவருள் முதல்வராகிய சிவபெருமானை ஆதிமுதலென்றார் (544). பெற்றவா - பெற்றவாறு. ஓஒ: வியப்பின்கட் குறிப்பு. வேதந் துறை செய்தான் - வியாச முனிவர். மெய் துணியான் - உண்மையைத் தெளியாராகி. கை துணிந்தான் - கை தடியப்பட்டார்; 466-ஆம் செய்யுள் 21-3-ம் அடிகளையும் அவற்றின் குறிப்பு முதலியவற்றையும் காண்க. பேதுற்றும் - மயக்கத்தை யடைந்தும். பிறவெஃகேம் பிற தெய்ங்களை விரும்பேம். வேதம் தெரிந்து துறை செய்தானும் அறியாத மெய்ம்மையை யாமுணர்ந்தது என்ன வியப்பு என்றாவாறு.