இது மூன்றாமடியின் இறுதி தனிச்சொற் பெற்று இரண்டு விகற்பத்தான் வந்த இன்னிசை வெண்பா. இதன்முதலடி இரண்டாமெழுத்துத் தகர அகரமும், இரண்டாமடி இரண்டாமெழுத்துத் தகர உகரமுமாக வந்தமையால் வருக்க வெதுகை.
494. செம்மல் - சிவபெருமான்; அவர் திருமேனி செந்நிற முடையதாதலின் நிறத்தாலும் தேனையொத்தது; 477-ஆம் செய்யுளைக் காண்க; “உமையாட் கென்றுந் தேனவன்காண்” (தே. திருநா. வலிவலம்)
495. ஆடகமென்பது பொன்னில் ஒருவகை. பாடகம் - மகளிர் காலில் அணியும் ஒருவகை யாபரணம். சூடகம் - காப்பு. இறைஞ்சினாரைக் கூற்று இறைஞ்சும்.
சிதம்பர தரிசனம் செந்தாருக்கு யமபயமில்லை யென்றபடி
496. பேதுற்றார் - மயக்கமடையதோர், பிழைத்து அகன்றார் மகளிர் மயக்கினின்றும் தப்பி நீங்கினோர்; இவர்கள் தூய சிந்தையினராதலின் இவர் நெஞ்சை நன்னெஞ்சு என்றார். பேதுற்றார் நெஞ்சு போது அம்பு அடரும் - மயங்கினாரது நெஞ்சம் காமனது மலர்ப்பாணத்தால் துன்