இஃது ஒருவிகற்பத்து ஐந்தடிப் பஃறொடைவெண்பா. இதன் முதலடி இரண்டாஞ்சீரொழிந்து ஏனை முச்சீரும் முரணத் தொடுத்தமையால் மேற்கதுவாய் முரண். இரண்டாமடி ஈற்றயற் சீரொழிந்து ஏனைமுச்சீரும் முரணத் தொடுத்தமையாற் கீழ்க்கதுவாய் முரண். இது பிறப்பென்னும் வாய்பாட்டுக் குற்றுகர இயற்சீரான் முடிந்தது.
னெஞ்சு போதம் படரும் - நல்ல நெஞ்சத்தில் சிவஞானம் பரவுகின்ற. இது சிலேடை. வண்டு தாதை உண்ணுதல், “தாதுண்பறவை பேதுறலஞ்சி” (அகநா. 4) என்பதனாலும் பெறப்படும். வைப்பு - எழுந்தருளியுள்ள இடம்.
497. காமர் - மன்மதனது; பன்மை இகழ்ச்சிக் குறிப்பு (திருச்சிற். 164). அவன் உயிரைச் செகுத்தது நெற்றிக்கண். மாதர் நலன் - காதலரைப் பிரிந்த மகளிரது அழகை. அதனை அழிக்குங் கண்ணாவது இடத் திருக்கண்ணாகிய சந்திரன். இன்னா இரவு: “இன்னா விரவி னின்றுணையாகிய” (குறுந். 266:2) இரவொழிக்கும் கண்ணென்றது வலத்திருக்கண்ணாகிய சூரியனை. தன்னேரிலாதான்: “தன்னை நேரொப் பிலாத தலைவனை” (தே. திருநா. திருப்புகலூர்.)
498. தலைவி காமமிக்க கழிபடர்கிளவியால் நிலவை நோக்கிக் கூறுதல்: இதனைச் சந்திரோபாலம்பனமென்பர்.
‘சிவபெருமான் நின்னோடு சூரியனையும் அக்கினியையும் இரண்டு கண்களாக உடைமையின் உயந்தேம்; நீயே அம் முக்கண்களாகவும் இருப்பின் எமக்கு உய்வே இல்லை’ என்று சந்திரனை நோக்கிக் கூறுகின்றாள். முன்னர்ப் பாட்டிற் கூறியவாறு மாதருக்குப் பகையாகிய காமனையும் இரவையும் போக்குவனவாதலின் முறையே அக்கினியும் சூரியனும் மகளிரால் வெறுக்கப்படாதனவாயின. செக்கர் - சிவப்பு. உண்டே: இல்லையென்றபடி.