பக்கம் எண் :

386குமரகுருபரசுவாமிகள் பிரபந்தத் திரட்டு

502.
வானே நிலனே கனலே மறிபுனலே
ஊனேயவ் வூனி லுயிரே யுயிர்த்துணையே
ஆனேறு மேறே யரசே யருட்கடலே
தேனே யமுதே யளியோங்கள் செல்வமே
யானே புலனு நலனு மிலனன்றே
ஆனாலு மென்போன்மற் றார்பெற்றா ரம்பலத்துள்
மாநாட கங்காணும் வாழ்வு.

    இஃது ஒருவிகற்பத்து ஏழடிப்பஃறொடைவெண்பா. இதன் முதலடி நாற்சீரும் இறுதியெழுத்து ஒன்றத் தொடுத்தமையால் முற்றியைபு. இரண்டாமடி முதலயற்சீரொழிந்து ஏனைமுச்சீரும் இறுதியெழுத்து ஒன்றத் தொடுத்தமையால் கீழ்க்கதுவாயியைபு. மூன்றாமடி முதற்சீரொழிந்து ஏனை முச்சீரும் இறுதி யெழுத்து ஒன்றத் தொடுதமையால் கூழையியைபு. நான்காமடி யீற்றயற் சீரொழிந்து ஏனை முச்சீரும் இறுதியெழுத்து ஒன்றத் தொடுத்தமையால் மேற்கதுவாயியைபு. ஐந்தாமடி முதற்சீரும் இறுதிச் சீரும் இறுதியெழுத்து ஒன்றத் தொடுத்தமையால் ஒரூஉவியைபு. இது காசென்னும் வாய்பாட்டு முற்றுகர இயற்சீரான் முடிந்தது.    
(22)

503.
வண்டுஞ் சுரும்பு ஞீமிறுங் குடைந்தார்ப்பத்    
தண்டே னிறைக்கு மிதழி நறுங்கண்ணி    
எண்டோன்முக் கண்ணா னிமயம் புனைமன்றில்    


    502. மறிபுனல் - மேலுங் கீழுமாக அலைகள் மடங்கும் நீர். ஊன் - உடலை. ஆன் ஏறும் ஏறே - இடபவாகனத்தில் எழுந்தருளும் சிங்கம் போன்றவனே. அளியோங்கள் - இரங்கற்குரியேமாகிய எங்களது; யாங்களென்றது அடியார்களையும் உள்ளிட்டு, புலன் - அறிவு. நலன் - நற்குண நற்செய்கை. மா நாடகம் - பரமானந்த தாண்டவம் (524); “தில்லையுண், மாந டஞ்செய் வரதர்” (பெரிய.) நாடக மென்றது இங்கே கதை தழுவிவருவதைக் குறியாமல் கூத்தென்னுமளவில் நின்றது, :இரதமுடைய நடமாட் டுடையவர்” (திருச்சிற். 57) என்பதிலுள்ள நடமென்பது போல.

    வாழ்வு பெற்றார் ஆரென்க.

    503. வண்டு, சுரும்பு, ஞிமிறென்பன வண்டின்சாதிகள். குடைந்து - கிண்டி. இறைக்கும் - பில்கவிடும். இதழி - கொன்றை. எண்டோண் முக்கண்ணான்: “எண்டோண் முக்கட், கருமிடற்றொருவ” (524); “இன்றோ ரிடையூ றெனக்குண்டோ வெண்டோண் முக்க ணெம்மானே” (திருவா.) இமயம் புனை மன்று - இமயத்தை ஒத அம்பலம்; இமயமென்றது இங்கே