இஃது அடியிரண்டாய்ச் சீர்வரையறையின்றி ஈற்றடி குறைந்து எந்தமையால் குறள் வெண்டாழிசை.
சூழ்ந்து - சுற்றப்பட்டு, எண்ணி; சிலேடை. சடிலம் - சடை. பொன்பூத்த - பொன்னிறத்தை யடைந்தன, பசலை நிறத்தைப் பெற்றன. இறைவன் திருத்தாரை வேட்டு நின்று விரகதாபத்தாற் பசலையுற்ற தலைவி கூறியது இது.
(பி-ம்.) ‘தம்பொற் புயம்’.
508. மழுவலத்தின் - மழுப்படையை வலத்திருக்கரத்திலே ஏந்தியவர். முழுவலத்த - பூரணமான வெற்றியையுடைய; இது மன்றுடையானுக்கு அடை. மான் - தலைவி.
இது செவிலி கூற்று; தோழி கூற்றுமாம்.
509. மணிமன்றம் - அழகிய சிற்றம்பலம். அம் பொன் மேரு நடராசப் பெருமான்; பொன்னிறமுடையாராகலின் மேருவென்றார்; “பொன்னார் மேனியனே” (தே. சுந்தர.); “பொன்வண்ண மெவ்வண்ண மவ்வண்ண மேனி பொலிந்திலங்கும்” (பொன்வண்ணத். 1). அடி முடி இன்று - ஆதியும் அந்தமும் இல்லை; இன்றென்பதைத் தனித்தனியே அடியோடும் முடியோடும் கூட்டிப் பொருள் செய்க, ஒருமையாதலின்.
510. கம்பைமா நதி - காஞ்சீபுரத்திலுள்ள கம்பாநதி. சிறு கன்னி - காமாட்சி அம்மை. காஞ்சீபுரத்தில் காமாட்சியம்மை தழுவ இறைவன்