பக்கம் எண் :

390குமரகுருபரசுவாமிகள் பிரபந்தத் திரட்டு

511.
முன்புல கீன்ற முகிண்முலைக் கன்னியோ
டின்புறும் யோகி யெழுபுவிக் கரசே.

    இஃது ஒழுகியவோசையும் விழுமிய பொருளு மின்றிக் குறள்வெண் செந்துறையோடு மாறுபட்டு வந்த குறள்வெண்டாழிசை.
(31)

512.
பின்றாழ் நறுங்கூந்தற் பிடிதழீஇ மால்யானைக்
கன்றீனு முக்கட் களிறு.

    இது குறள்வெண்பா செப்பலோசையிற் சிதைந்துவந்த குறள்வெண்டாழிசை இவையிரண்டும் குறள் வெண்பாவினம்.    
(32)

513.
கனக மார் கவின்செய் மன்றில்
அனகநாட கற்கெம் மன்னை
மனைவிதாய் தங்கை மகள்.

    இது மூன்றடியாய் வெண்பாவேபோல் முடிந்தமையால் வெள்ளொத்தாழிசை. இதனுள் ஆர் என நேரசைச் சீர்நின்று மேலே கவின் என நிரையசைவர மாஞ்சீர் போல இயற்சீர் வெண்டளையாயினவாறு காண்க.    
(33)


குழைந்த வரலாறு இங்கே குறிக்கப் பெற்றது. உம்பர்கோன் - சிவபெருமான். அவர் விடையென்றது திருமாலை. உலகேழு முண்டது திருமாலின் செயல்.

    தம்முடைய விடை உலகேழும் உண்ணும் ஆற்றலுடையதாயிருப்பவும் தாம் சிறுகன்னியொருத்தி நகிலால் தழும்பு பெற்ற மென்மையுடையராயினாரென இதில் ஒரு குறிப்புத் தோற்றியது.

    511. முகிழ் முலை யென்றது முகிண் முலையென வந்தது; முகிழ் - தாமரை யரும்புபோன்ற. கன்னியாக இருந்தே உலகையீன்றதும் யோகி கன்னியோ டின்புறுதலும் அரசாயிருத்தலும் வியப்பை உண்டுபண்ணும் செயல்கள். “பரமனே பரம யோகி” (தே.) என்று சிவபெருமானை யோகி யெனக் கூறுதல் காண்க.

    512. பின் தாழ் நறுங்கூந்தல் - பின்னே தாழ்ந்த இயற்கை மணத்தையுடைய கூந்தல். கூந்தற்பிடி: 465. யானைக்கன்றென்றது விநாயகக் கடவுளை முக்கட்களிறு - சிவபெருமான். இச்செய்யுளோடு 11, 349, 376 ஆம் செய்யுட் பகுதிகள் ஒப்பு நோக்கற் குரியன.

    513. எம் அன்னை - உமாதேவியார்; சக்தி தததுவத்தினின்றும் சதாசிவ தத்துவந் தோன்றுதலின் தாயென்றார் (திருச்சிற். 112, பேர்.); “எம்பெரு மானிமவான் மகட்குத், தன்னுடைக் கேள்வன் மகன்றகப்பன் றமையன்” (திருவா. திருப்பொற் சுண்ணம், 13); “தவளத்த நீறணி யுந்தடந் தோளண்ண றன்னொருபா, லவளத்த னாமக னாந்தில்லையான்” (திருச்சிற். 112); “சிவஞ்சத்தி தன்னை யீன்றுஞ் த்திதான் சிவத்தை யீன்றும்” (சிவஞான சித்தியார்).