-தரவு- 537. | கொன்செய்த கலையல்குற் கொலைசெய்தமதர் வேர்கண் | | மின்செய்த சிறுமருங்குற் பேருந்தேவி விழிகுளிர்ப்பப் | | பொன்செய்த மணிமன்றி னடஞ்செய்த புகழோய்கேள். |
-தாழிசை- (1) | முருகுயிர்க்கு நறுந்தெரியன் மொய்குழலின் மையுண்கட் | | பொருகயற்குன் றிருமேனி புதுவெள்ளப் புணரியே | (2) | தேன்மறிக்கும் வெறித்தொங்கலறற்கூந்தற்றிருந் திழைகண் | | மான்மறிக்குன் றிருமேனி மலம்முல்லைப் புறவமே. |
537. (தரவு.) பெருந்தேவி - சிவகாமவல்லியம்மையார்.
(தாழிசை.) (1) முருகு - நறுமணம். தெரியல் - மாலை. மொய்குழல் - உமாதேவியாருடைய. மையுண்கட் பொருகயற்கு மையணிந்த கண்ணாகிய மாறுபடும் கயற்கு; உமாதேவியார் என்றும் மங்கலமுடையராதலின் அவர் திருவிழிகளில் அதற்கு அறிகுறியாக என்றும் மை விளங்கும்; “மைஞ்ஞின்ற வொண்கண் மலைமகள்” (தே. திருநா.) புதுவெள்ளப் புணரி - புதுநீர் வெள்ளத்தையுடைய கடல். ஆடவர்களது மேனிச் சாயற்கு நீரை உவமை கூறுதல் மரபாதலின், இங்கே இறைவன் திருமேனியைப் புது வெள்ளப் புணரியாக உருவகம் செய்தார்; “வானிநீரினுந் தீந்தண் சாயலன்” (பதிற். 86; 12-3); “நீரினுஞ் சாய லுடையன்”. :வேனிற் புனலன்ன நுந்தை” (கலி. 42: 20, 84:38); நீரினு மினிய சாயற், பாரி” (புறநா. 105: 7-8.)
அம்பிகையின் திருக்கண்கள் நடராசப் பெருமானது திருமேனியழகிலே ஈடுபட்டுத் திளைக்குமென்பது கருத்து. பின் இரண்டு தாழிசைகளின் கருத்தும் இதுவே.
(2) கண் மான் மறிக்கு - கண்ணாகிய மான்கன்றுக்கு; மான் மறியென்றது அதன் கண்ணைக் குறித்தவாறு. மலர்முல்லைப் புறவம் - மலர்ந்த முல்லைப் பூக்களையுடைய முல்லைநிலம். மான் முல்லை நிலக் கருப்பொருளாதலின் அதற்கேற்ப்ப் புறவத்தைக் கூறினார். சிறந்த ஆடவர் மேனி முல்லைமலரின் மணத்தையுடையதாக இருக்குமாதலின் இறைவன் நறுமேனியை முல்லைப் புறவமாக உருவகம் செய்தார்; “மணந்தனன் மன்னெடுந் தோளே, இன்று முல்லைமுகைநா றும்மே” (குறுந். 193: 5-6): “பந்தினை யிளையவர் பயிலிட மயிலூர், கந்தனை யனையவர் கலைதெரி கழகம், சந்தன வனமல சண்பக வனமாம், நந்தன வனமல நறைவிரி புறவம்” (கம்ப. நாட்டுப். 48.)
|