பக்கம் எண் :

சிதம்பரச் செய்யுட்கோவை405

(3)
பிறையளிக்குஞ் சிறுநுதலப் பெண்ணமுதின் பேரமர்க்கட் 
சிறையளிக்குன் றிருமேனி தேனளிக்கும் பொதம்பரே. 

அதனால்

-சுரிதகம்-
மதுவிரி கோதை மடவாற் கம்ம 
புதுவிருந் துண்ண வுண்ண 
அதிசயம் விளைக்குநின் னற்புதக் கூத்தே. 

    இது, தரவொன்றும் தாழிசை மூன்றும் தனிச்சொல்லும், சுரிதகமுமாய் வருதலின் நேரிசை யொத்தாழிசைக்கலிப்பா. இதனுட்பிறையளிக்குஞ் சிறுநுதலப் பெண்ணமுதின் பேரமர்க் கண் என இரண்டாஞ் சீரும் ஈற்றுச்சீரும் முரணத் தொடுத்துப் பின்முரண் வந்தவாறு காண்க. இதனானே, தரவு மூன்றடிச் சிறுமை யுடைத்தெனவும், தாழிசை இரண்டடிச் சிறுமை யுடைத்தெனவும் உணர்க.    
(57)

-தரவு-
538.
பேதைமீர் பேதைமீர்
பூமன்னு திசைமுகனும் புயல்வண்ணப் பண்ணவனும்
காமன்னு புரந்தரனுங் கடவுளரும் புடைநெருங்க
இருகோட்டுக் கிடைந்தவிடு கிடையவர்பல் லாண்டிசைப்ப
ஒருகோட்டு மழகளிறு மிளங்கோவு முடன்போத
அம்பொன்மணி மதிற்றில்லை நடராச னணிமறுகில்
செம்பொன்மணிப் பொலந்திண்டேர்த் திருவுலாப் போதுங்கால்

    (3) பிறையளிக்கும்; அளிக்கும்: உவமவுருபு. கண்ணாகிய சிறையையுடைய அளிக்கு: அளி - வண்டு. பொதும்பர் - சோலை; 494-ஆம் செய்யுளைப் பார்க்க.

    அதனாலென்பது தனிச்சொல்.

    (சுரிதகம்.) அற்புதக்கூத்து - ஞான நடனம்.

    538. (தரவு.) பேதைமீர் பேதைமீர் என்னும் அடுக்கு, பன்மைபற்றி வந்தது. புயல்வண்ணப் பண்ணவன் - திருமால். கா - கற்பகதரு. இருகோட்டுக்கு இடைந்த இடுகு இடையவர் - நகில்களாகிய இரண்டு மலைச்சிகரங்களுக்கு மெலிந்து சிறுகிய இடையையுடைய மகளிர்; கோடு - யானைக்கொம்புமாம். மழகளிறு - விநாயகர். இளங்கோ - முருகக் கடவுள்.