பக்கம் எண் :

சிதம்பரச் செய்யுட்கோவை407

 -ஈரடி அம்போதரங்கம்-
அருங்கலை கவர்ந்துநீ ரளிக்கப் பெற்றநும்.    
இருங்கலை யினிதெமக்கென்ப ரோர்சிலர்.    
நன்னிறங் கவர்ந்துநீர் நல்கப் பெற்றநும்.    
பொன்னிற மினிதெனப் புகல்வ ரோர்சிலர்.    

      -நாற்சீர் ஓரடி அம்போதரங்கம்-
    தேரினை நோக்கியே திரிவர் சிற்சிலர்.    
    ஏரினை நோக்கியே யெழுவர் சிற்சிலர்.    
    தாரினை நோக்கியே தளர்வர் சிற்சிலர்.    
    மாரினை நோக்கியே மருள்வர் சிற்சிலர்.    

      -முச்சீரோரடி அம்போதரங்கம்-
    நலனழிந்து நிற்பார் சிலர்.    
    நாண்டுறந்து நிற்பார் சிலர்.
    கலனழிந்து நிற்பார் சிலர்.    
    கண்கலுழ்ந்து நிற்பார் சிலர்.    


    புரமென்பதைத் திரிபுரம் உடலென்னும் இருபொருளில் வைத்து அமைத்த பின்வரும் செய்யுட்பகுதிகள் இங்கே ஒப்பு நோக்கற்குரியன; “வெண்ணி லாமுகிழ்க் குங்குறு மூரலால் வீணிலேயெம் புரத்தெரி யிட்ட நீர், கண்ணி னாலுமிக் காமனைக் காய்ந்திடிற் கடவு ணீரென் றிறைஞ்சுதுங் காணுமே” (614); “மேலைப் புரத்தை நகைத்தெரித்தீர் வில்வேள் புரத்தைப் பகைத்தெரித்தீர்” (அருணைக்கலம். 22).

    (அம்போதரங்கம்.) கலை - ஆடை. நும் இரங்கலையென்பது திகம்பரத்தை; “திகம்பரரா நும்மைத் தெரிந்தடைந்த யாமும், திகம்பரரேயாகிச் சிறந்தோம்” (திருவிடைமருதூருலா, 319). நன்னிறமென்றது மாமையை. பொன்னிறமென்றது பசலை நிறத்தை. இறைவன் பொன்னிற முடையவனாதலின், ‘நும் பொன்னிறம்’ என்றார்; 509-ஆம் செய்யுளையும் அதன் குறிப்புரையையும் பார்க்க. இவை இரண்டும் நாற்சீரடி அம்போதரங்கம்; பேரெண்.

    ஏர்-அழகு. மார்-மார்பு; “கடுக்கைத் தொடைமார் கழியான்” (திருவானைக்காவுலா, 86); “மார்தங்கு தாரைத்தந் தருள்வாயே” (திருப்புகழ்); “மார்தட் டியதுரை மாலைசீதக் காதி வரோதயனே” (படிக்காசுப் புலவர் பாடல்.)

    நாற்சீர் ஓரடி அம்போதரங்கம் நான்கும் அளவெண்; முச்சீரோரடி அம்போதரங்கம் நான்கும் இடையெண்.