இது தாழிசைக்கும் தனிச்சொற்கும் இடையே நால்வகை அம்போதரங்கமும் பெற்று வருதலின் அம்போதரங்க ஒத்தாழிசைக் கலிப்பா. இதன் முதற்கண் பேதைமீர் பேதைமீர் என அடிகூனாய் வந்தவாறு காண்க.
இருசீர் ஓரடி அம்போதரங்கம் எட்டும் சிற்றெண்.
ஆங்கொருசாரென்பது தனிச்சொல்.
(சுரிதகம்.) மங்கையென்றது இங்கே பருவங் குறியாது பெண்ணென்னுந் துணையாய் நின்றது. சாந்தம் - சந்தனம். ஆம்பற் பூவின் முல்லையும் முகைத்தில - செவ்வாம்பல் மலரைப்போன்ற வாயில் முல்லை யரும்பைப் போன்ற பற்களும் தோற்றவில்லை. பேதைப் பருவத்தினளாகிய இவள் மங்கைப் பருவத்தினளைப் போலக் காம மயக்கம் கொண்டது வியப்பு என்றவாறு. “முதுக்குறைந் தனளே முதுக்குறைந் தனளே, மலைய னொளவேற் கண்ணி, முலையும் வாரா முதுக்குறைந் தனளே” (பழம்பாடல்.)
இச்செய்யுள் செவிலித்தாய் கூற்று.