(3) | வருநீலப் புயன்மலர மலரிதழிக் கண்ணியையும் | | அருநீல முயற்களங்க மகன்றமதிக் கண்ணியையும் | | கருநீலக் கண்ணியுமை செங்கைவரு கங்கையெனும் | | திருநீலக் கண்ணியையுஞ் செஞ்சடைமேற் செறித்தனையே. |
-அராகம்- (1) | கறைவிட முகவெரி கனல்விழி யொடுமிளிர் | | பிறையெயி றொடுமிடல் பெறுபக டொடுமடல் | | எறுழ்வலி யொடுமுரு மிடியென வருமொரு | | மறலிய துயிர்கொள மலர்தரு கழலினை. |
(2) | உலகமொ டுயிர்களு முலைதர வலம்வரும் | | மலர்மகள் கொழுநனு மகபதி முதலிய | | புலவரு மடிகளொர் புகலென முறையிட | | அலைகடல் விடமுன ம்முதுசெய் தருளினை. |
(3) | விசையிலே மிறைவியும் வெருவர விரசத | | அசலம தசைதர வடல்புரி தசமுக | | நிசிசரன் மணிமுடி நெறுநெறு நெறுவென | | வசையில்பொன் மலரடி மணிவிர னிறுவினை. |
(3) நீலநிறம் பொருந்திய மேகம் வெளிப்பட மலர்கின்ற கொன்றையாகிய கண்ணியையும், அரிய கறுப்புநிறம் பொருந்திய முயலாகிய கறை நீங்கிய பிறையாகிய கண்ணியையும், கரிய நீலக் கண்களை யுடைய உமாதேவியாரது செவ்விய திருக்கரத்திலே தோற்றிய கங்கை யென்னும் அழகிய நீலநிறம் பொருந்திய கண்களையுடையவளையும் செந்நிறமுள்ள சடையின்மேல் அணிந்தருளினை. கங்கை உமாதேவியாரது திருக்கரத்திலே தோற்றிய செய்தி, “சங்கரன் விழிகண் மூடுந் தனாதுகை திறக்கு மெல்லை, அங்குலி யவையீ ரைந்து மச்சத்தால் வியர்ப்புத் தோன்ற, மங்கையைத் தகைமை காணூஉ மற்றவை விதிர்ப்பப் போந்து, கங்கையோர் பத்தா யாண்டுங் கடல்களிற் செறிந்த வன்றே” (கந்த. ததீசியுத்தரப், 369) என்பதனால் விளங்கும்.
(அராகம்.) (1) பகடு - எருமைக்கடா. மறலி - யமன். (2) உலைதர - அழிய. புலவரும் - தேவர்களும். (3) விசையில் - இராவணன் கைலைமலைத் தூக்கிய வேகத்தினால். இரசத அசலம் - கைலாயமலை. தசமுக நிசிசரன் - இராவணன். நெறுநெறு நெறுவென: “நீருருவக் கடலிலங்கையரக்கர் கோனை நெறுநெறென வடர்த்திட்ட நிலையுந் தோன்றும்” (தே. திருநா. திருப்பூவணம்). மணிவிரல் - பெருவிரல்.
|