பக்கம் எண் :

சிதம்பரச் செய்யுட்கோவை411

(4)
இலவிதழ் மதிநுத லிரதியோ டிரதம    
துலைவற நடவிடு மொருவனும் வெருவர    
அலைகட னெடுமுர சதிர்தர வெதிர்தரு    
சிலைமத ன்னையடல் செயுநுதல் விழியினை.    

-ஈரடி அம்போதரங்கம்-
அருவமு முருவமு மாகி நின்றுமவ்    
வருவமு முருவழு மகன்று நின்றனை.    
சொல்லொடு பொருளுமாய்த் தோன்றி நின்றிமச்    
சொல்லையும் பொருளையுந் துறந்து நின்றனை.    

-ஓரடி அம்போதரங்கம்-
அந்நலம் விழைந்தவர்க் கறமு மாயினை.    
பொன்னலம் விழைந்தவர் பொரொளு மாயினை.    
இன்னலம் விழைந்தவர்க் கின்பு மாயினை.    
மெய்ந்நலம் விழைந்தவர் வீடு மாயினை.    

-முச்சீரோரடி அம்போதரங்கம்-
முத்தொழிலின் வினைமுலனீ. மூவர்க்கு முழுமுத னீ.
எத்தொழிலு மிறந்தோய் நீ.இறவாத தொழிலினை நீ.
இருவிசும்பின் மேயாய் நீ. எழின்மலரின் மிசையோய்நீ.
அரவணையிற் றுயின்றோய் நீ.ஆலின்கீ ழமர்ந்தோய் நீ.


    (4) நடவிடும் - செலுத்தும். ஒருவன் - வசந்தன். கடலாகிய நெடிய முரசு.

    நாற்சீரீரடி அம்போதரங்கம் இரண்டும் பேரெண்.

    (நாற்சீரோரடி அம்போதரங்கம்.) அந்நலம் - அறத்தின் நன்மை; செய்யுளாதலின் சுட்டு முன்வந்தது. இல் நலம் - இல் வாழ்க்கையின் நன்மை; மெய்ந்நலம் - உண்மையான இன்பத்தை (548.) இவை நான்கும் அளவெண்.

    (மூச்சீரோரடி அம்போதரங்கம்.) முத்தொழிலின் வினைமுதல் - ஆக்கல், அளித்தல், அழித்தலென்னும் மூன்று தொழில்களையும் செய்யும் கருத்தா (519). மலரின் மிசையோய் - பிரமவாகியிருப்பாய். அரவணையில் துயின்றோய் - திருமாலாக இருப்பாய். ஆலின்கீ ழமர்ந்த திருவுருவம் தட்சிணாமூர்த்தியின் திருவுருவம். இம்முச்சீரோரடி அம்போதரங்கம் எட்டும் இடையெண்.