பக்கம் எண் :

சிதம்பரச் செய்யுட்கோவை413

541.
அற்புத மணிமன்றி லடிகணின் னடியுன்னார்
மைக்கடல் விடமென்னும் வடவைத்தீ யெழவஞ்சி
நொஎன வடிவீழ்ந்தார்க் குதவிலர் நாணார்கொல்
கைத்தல வபயத்தர் வரதத்தர் கைசெய்யாச்
சித்திர மன்ன சிலர்.

    இது பிறதளை விரவி வந்த வெண்கலிப்பா. இதனுள் நொ எனக் குற்றெழுத்து விட்டிசைத்தவழித் தனியே நின்று முதற்கண் நேரசையாயிற்று. அவ்விட்டிசை வல்லொற்றோடு ஒத்து எதுகையாய் நடத்தலின் இது விட்டிசைவல்லொற்றெதுகை.    
(61)

542.
தொடலைக் குறுந்தொடித் தோகாய்நம் பாவை  
படலைச் சிறுமுச்சி யுச்சிப் பசுங்கிள்ளை  
பேதைக் குழாத்தொடு நென்னற் பொழுதின்கண்  
வீதிக்கே நின்று விளையாட் டயருங்கால்  
5
அஞ்சனக் கண்ணாளுந் தாமு மணிதில்லைச்  
செஞ்சடைக் கூத்தனார் வெள்விடை மேற்சேறலும்  
உண்ணெக் குருக வெதிர்ப்பட் டுடையானைக்  
கண்ணிற் பிணித்து மனத்திற் கொடுபுக்  


    541. அடிகள் நின் - தேவரீருடைய. அடி உன்னார் - திருவடிகளை நினையாராய். நொ என - துன்பமென்று முறையிட்டு; “நொ அலைய னின்னாட்டை நீ” (யா. கா. மேற்.) கைசெய்யா - கையால் இயற்றப்படாத.

    சிவபெருமானை யொழிந்த தேவர்கள் தமக்கு வந்த துன்பத்தையே நீக்கிக் கொள்ள அறியாராய்த் தம்பால் துன்பம் நீங்கும் பொருட்டு வருவோர்க்கும் உதவி செய்திலர். அங்ஙனம் இருப்பதனால் அவர், தம்பாற் சரணடைந்தோரைப் பாதுகாக்கும் குறிப்புடைய அபயவரதங்களை உடையவராயிருத்தல் பயனின்று; சித்திரத்திற்குச் செயலில்லை யாதல் போல அவர்களுடைய அபய வரதத் திருக்கோலத்திற்கும் பயனில்லை யென்றவாறு.

    542. சிவபெருமான் திருவுலாவைத் தரிசித்து மால்கொண்ட தலைவியொருத்தியின் நிலையைத் தோழி கூறியது இது.

    (அடி, 1-2) தொடலைக் குறுந்தொடி - மாலை போலத் தொடர்ந்த சிறு வளையினையுடையாள் (குறள், 1135.) படலை - தழை விரவித் தொடுத்த மாலை.

    (3) பேதைக் குழாம் - பேதை மகளிர் கூட்டம். நென்னற் பொழுது - நேற்றைப்பொழுது.

    (4) வீதிக்கே - வீதியில்; உருபு மயக்கம்.

    (5) அஞ்சனக்கண்ணாள் - உமாதேவியார்.