பக்கம் எண் :

414குமரகுருபரசுவாமிகள் பிரபந்தத் திரட்டு

கிறைவளை சிந்த வணிதுகில் சோரப்
10
பிறரறியா வண்ணம் புணர்ந்தும் புணராள்கோல்
னையுண்கண் ணீர்சோரச் சோர்தலும் வார்குழலார்
கைகோத் தெடுத்துக் கடிமனை கொண்டுய்ப்பப்
பைந்தண் குளிரி படுத்துக் கிடத்தலும்
செந்தீப் பிழம்பிற் கிடத்திச் செருச்செய்வ
15
தந்தோ கொடிதுகொடி தென்செய்தீ ரன்னைமீர்
பொன்னஞ் சிலையே சிலையாப் புரமெய்தான்
தண்ணென் கடுக்கை கொணர்ந்தாரோ தம்மினென
மின்றந்த நுண்ணிடையா யெங்கோன் விரைத்தொங்கல்
தன்றந்தை தாளெறிந்தாற் கன்றித் தரானென்றேற்
20
கன்றே பகைநோக் களித்தாண்மற் றம்ம
சிறியாள் பெரும்பித் தறிந்திருந்துஞ் செவ்வி
அறியா துரைத்தே னது.

    இது செப்பலோசைத்தாய் ஒரு பொருணுதலி அவ்வாறு வந்தமையால் கலிவெண்பா.    
(62)

543.
அடிகொண்ட குனிப்பன்றே யரிபிரமர் முதலானோர்
முடிகொண்ட தலைவணக்கின் குனிப்பெல்லா முறைமுறைபோய்க்
கடிகொண்ட பொழிற்றில்லை நடராசன் கழற்காலிற்
குடிகொண்ட படிபோலு மிடத்தாளிற் குஞ்சிதமே.

    இது கலித்தளை தட்டுச் தனிச்சொல்லும் சுரிதகமும் பெறாது தனியே வந்த தரவு கொச்சகம்.
(63)


    (9) இறை - முன்கைச்சந்து.

    (10) பிறரறியாவண்ணம் புணர்ந்தென்றது உள்ளப் புணர்ச்சியைக் குறித்தபடி.

    (13) குளிரி - ஒருவகை நீர்ப்பூடு, நீலோற்பலமுமாம்; பூந்தடுக்கென்பாருமுளர்.

    (16) பொன்னஞ்சிலை - மேருமலை. சிலையா - வில்லாக.

    (17) கடுக்கை - கொன்றைமாலை. என - என்று தலைவி கூற.

    (19) தன் தந்தை தாளெறிந்தான் - சண்டீசர்; சிவபெருமான் அணிந்த கொன்றை முதலிய நிர்மாலியங்கள் அவருக்குரியன (118, 639.)

    (21) செவ்வி - சமயம்.

    543. குனிப்பு - வளைவு, கடி - நறுமணம். இடத்தாளிற் குஞ்சிதம் அடிகொண்ட குனிப்பன்று; குடிகொண்ட படிபோலுமென்க.