பக்கம் எண் :

சிதம்பரச் செய்யுட்கோவை415

-தரவு-
544.
மல்லாண்ட திரடிண்டோட் டுழாய்முதலு மணிநாவிற் 
சொல்லாண்ட மறைமுதலும் பலராங்குத் தொலைவெய்த 
பல்லாண்டு செலச்செல்லா விளையோரும் பனிாபபெய்த 
அல்லாண்ட நள்ளிருளி லழலாடுந் தொழிலினையே. 

அதனால்

-சுரிதகம்-
பல்பே ரூழி செல்லினு மடிகட்
கொல்லையுஞ் செல்லா தாகு மாகலின்
அளவில் கால மலக்கணுற் றுழலுமென்
தளர்வு நோக்காய் போலு நோக்கின்
கருணைசெய் தருளா யல்லை
அருணலம் பழுத்த வாடல்வல் லோயே.

    இது தனிச்சொல்லும் சுரிதகமும் பெற்றுவந்த தரவுகொச்சகம்.    
(64)


-தரவு-
545.
(1) குழைதூங்கு கழைமென்றோட் கோமாரி கொலைக்கண்கள்
இழைதூங்கு முலைக்கண்வைத் தேயெய்தா நாணேய்த
உழைதூங்கு குயிலேங்க வுருமுத்தீ யுகநக்கு
மழைதூங்கு பொழிற்றில்லை மணிமன்று ணடஞ்செய்வோய்.


    544. துழாய் முதல் - திருமால். (பி-ம்.) ‘நடுமுதலு மணி நாவிற்’. மறைமுதல் - பிரமதேவர் (493). இளையோர் சனகாதி முனிவர். பனிப்பெய்த - நடுங்க. அழலில் ஆடும். நள்ளிருளில் ஆடுதல்: 34; “நள்ளிருளினட்டம் பயின்றாடு நாதனே” (திருவா. சிவபுராணம்.) அதனால் என்பது தனிச்சொல். ஒல்லையும் - சிறிது பொழுதும்.

    545. (1) கழை - மூங்கில். கோமாரி - கௌமாரி; காளி. இறைவனோடு நடஞ்செய்ய இயலாமையின் நாணினள். இழை - ஆபரணம். கண்களை நகிற்கண்ணே வைத்தல் நாணக் குறிப்பு; “சிலைமுகங் கோட்டுமச் சில்லரித் தடங்கண், முலைமுகங் கோட்டினள்”, (546) என்று பின்வருதலைக் காண்க. குயில் ஏங்க - மழையைக் கண்டு குயில் வருந்த. உருமுத்தீ - இடி. (பி-ம்.) ‘குயினேங்க’. மழை - மேகம்.